For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஒரே ஒரு டுவிட் போட்டுவிட்டு திமுகவினரிடம், எச்.ராஜா படும் பாட்டை பாருங்க!

By Raj
Google Oneindia Tamil News

Recommended Video

    எச். ராஜா போட்ட மோசமான ட்வீட்..!!- வீடியோ

    சென்னை: திமுக தலைவர் கருணாநிதியை விமர்சனம் செய்து டுவிட் வெளியிட்ட பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவுக்கு எதிராக நூதனமான போராட்டங்களை திமுகவின் மா.சுப்பிரமணியன் கையில் எடுத்துள்ளார்.

    சென்னையில் இன்று நடைபெற உள்ள நூதன போராட்டங்களில் திமுகவினர் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ராஜா கர்நாடகாவுக்கு தேர்தல் பணியாற்ற சென்றுள்ளார்.

    திமுக தலைவர் கருணாநிதியையும் அவரது குடும்பத்தையும் மிக கேவலமான வார்த்தைகளால் அர்ச்சித்துப் பதிவு செய்திருந்தார் பாஜக தேசிய செயலர் எச்.ராஜா.

    பாஜகவினரே அதிருப்தி

    பாஜகவினரே அதிருப்தி

    அவரது விமர்சனத்தை பாஜகவினரே ஏற்கவில்லை. முகம் சுளித்தனர். இந்த நிலையில், ராஜாவின் பதிவு திமுகவினரை கொந்தளிக்க வைத்தது. தமிழகம் முழுவதும் ராஜாவின் உருவபொம்மையை எரித்தும், அவரது படத்தை செருப்பால் அடித்தும் தங்கள் கோபத்தை ஆக்ரோஷமாக காட்டி வருகிறார்கள் திமுகவினர்.

    எச்சில் துப்பும் போராட்டம்

    எச்சில் துப்பும் போராட்டம்

    இந்த போராட்டம் ஓயாத நிலையில், தென்சென்னை மாவட்ட திமுக செயலரும் எம்.எல்.ஏ.வுமான மா.சுப்ரமணியன் தலைமையில் இன்று மாலை ராஜாவுக்கு எதிராக எச்சில் துப்பும் போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ள்னர். எச்ச ராஜாவை எச்சில் தொட்டியில் தூக்கி எறிவோம் என்கிற வாசகத்துடன் அவரது உருவப்படம் பொறித்த ஸ்டிக்கர்கள் தயாரித்துள்ளனர்.

    தென் சென்னை குப்பை தொட்டிகள்

    தென் சென்னை குப்பை தொட்டிகள்

    இந்த ஸ்டிக்கரை தென் சென்னையிலுள்ள அனைத்து குப்பைத் தொட்டிகளிலும் ஒட்டவிருக்கறார்கள். அதன்பின், ராஜாவின் முகத்தில் காரித்துப்பும் போராட்டத்தை நடத்துகின்றனர். மா.சு தலைமையில், எச்.ராஜாவை அசிங்கப்படுத்தும் இந்த போராட்டம் பரபரப்பாக நடக்கவிருக்கிறது.

    கர்நாடகா சென்ற எச்.ராஜா

    இதனிடையே, எச்.ராஜா கர்நாடகாவிற்கு தேர்தல் பணியாற்ற சென்றுள்ளதாக டுவிட் செய்துள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டில், "இன்று முதல் கர்நாடக தேர்தல் பணி துவக்கம். மத்திய அமைச்சர்கள் மற்றும் தேசீய நிர்வாகிகள் 56 பேருக்கு தலா 4 தொகுதிகள் பொறுப்பு தரப்பட்டது . இரண்டாம் கட்டப் பணிக்காக கர்நாடக வந்துள்ளேன்". இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    English summary
    DMK on today doing Spit protest against H.Raja, who tweeted against Karunanidhi.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X