For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திமுகவின் 65 மாவட்டங்கள் இவைதான்..

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: திமுகவில் கோலோச்சிக் கொண்டிருந்த மாவட்ட செயலாளர்களுக்கு வேட்டு வைக்கும் வகையில் அக்கட்சியின் மாவட்ட நிர்வாக அமைப்புகள் 65 ஆக பிரிக்கப்பட்டுள்ளன.

லோக்சபா தேர்தலில் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து திமுகவில் 25, 30 ஆண்டுகளாக மாவட்ட செயலாளர்கள் என்ற பதவியில் அப்படியே அசையாமல் அமர்ந்திருப்போர் மீது தொண்டர்களின் கோபம் திரும்பியது. அவர்களே இந்த படுதோல்விக்குக் காரணம் என்று பகிரங்கமாக குற்றம்சாட்டப்பட்டது.

இதைத் தொடர்ந்து திமுகவின் உயர்நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம் சென்னையில் கூட்டப்பட்டது. அதில் திமுகவை சீரமைப்பதற்கான குழு ஒன்று அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

DMK restructures district units

அதனடிப்படையில் கலசப்பாக்கம் திருவேங்கடம், ஒரத்தநாடு ராஜமாணிக்கம், திருத்துறைப்பூண்டி டி.எஸ்.கல்யாணசுந்தரம், ஈரோடு எஸ்.எல்.டி.சச்சிதானந்தம், வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் மற்றும் முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.

இக்குழுவின் 150 பக்க பரிந்துரையை ஏற்று திமுக 65 மாவட்டங்களாக பிரிக்கப்படுவதாக நேற்று அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக திமுக பொதுச் செயலர் க.அன்பழகன் வெளியிட்ட அறிக்கை:

கடந்த 3-2-2012 அன்று சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் நடைபெற்ற கழகப் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி கழகத்தின் சட்டத் திட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட 'வருவாய் மாவட்ட எல்லைக்குட்பட்டு ஒன்றோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட மாவட்டக் கழகங்களோ அமையும்' என்ற திருத்தத்தின் அடிப்படையில் கடந்த 2-6-2014 அன்று கூடிய

கழக உயர் நிலைச் செயல் திட்டக் குழுக் கூட்டத்தில் மாவட்டக் கழக அமைப்புகளை எளிமைப்படுத்தவும், அவற்றின் செயல்பாடுகளை வலிமைப்படுத்தவும் உரிய பரிந்துரைகளை வழங்குவதற்கு குழு ஒன்றை நியமிக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

அவ்வாறு அமைக்கப்பட்ட குழுவினர் அளித்த பரிந்துரையின் அடிப்படையில் வருவாய் மாவட்டங்களில் பின்வருமாறு சட்ட மன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய 65 மாவட்டக் கழகங்கள் அமையும்.

புதிதாக அமையவிருக்கும் மாவட்டக் கழக எல்லைகளுக்குள் அடங்கக் கூடிய ஒன்றிய மற்றும் நகரக் கழகங்கள் யாவை என்பது விரைவில் அறிவிக்கப்படும். அதைத் தொடர்ந்து ஒன்றிய, நகர, மாவட்டக் கழக அமைப்புகளுக்கான தேர்தல்கள் நடைபெறும்.

திமுகவின் 65 மாவட்டங்களும் அதன் கீழ் வரும் சட்டசபை தொகுதிகளும்:

1. சென்னை வடக்கு மாவட்டம்

திருவொற்றியூர்

மாதவரம்

பெரம்பூர்

டாக்டர் இராதாகிருஷ்ணன் நகர்

ராயபுரம்

2. சென்னை கிழக்கு மாவட்டம்

துறைமுகம்

எழும்பூர்

சேப்பாக்கம்

திருவல்லிக்கேணி

கொளத்தூர்

திரு.வி.க. நகர்

அம்பத்தூர்

3. சென்னை மேற்கு மாவட்டம்

மதுரவாயல்

வில்லிவாக்கம்

அண்ணா நகர்

ஆயிரம்விளக்கு

மயிலாப்பூர்

தியாகராய நகர்

4. சென்னை தெற்கு மாவட்டம்

சைதாப்பேட்டை

விருகம்பாக்கம்

ஆலந்தூர்

வேளச்சேரி

சோழிங்கநல்லூர்

5. திருவள்ளூர் வடக்கு மாவட்டம்

கும்மிடிப்பூண்டி

பொன்னேரி (தனி)

திருத்தணி

6. திருவள்ளூர் தெற்கு மாவட்டம்

திருவள்ளூர்

பூவிருந்தவல்லி (தனி)

ஆவடி

7. காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம்

திருப்பெரும்புதூர் (தனி)

பல்லாவரம்

தாம்பரம்

செங்கல்பட்டு

திருப்போரூர்

8. காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம்

உத்திரமேரூர்

காஞ்சிபுரம்

செய்யூர் (தனி)

மதுராந்தகம் (தனி)

9. வேலூர் கிழக்கு மாவட்டம்

அரக்கோணம் (தனி)

சோளிங்கர்

இராணிப்பேட்டை

ஆற்காடு

10. வேலூர் மத்திய மாவட்டம்

வேலூர்

காட்பாடி

கீழ்வைத்தியணான்குப்பம் (தனி)

அணைக்கட்டு

குடியாத்தம் (தனி)

11. வேலூர் மேற்கு மாவட்டம்

வாணியம்பாடி

ஆம்பூர்

ஜோலார்பேட்டை

திருப்பத்தூர்

12. திருவண்ணாமலை வடக்கு மாவட்டம்

போளூர்

ஆரணி

செய்யார்

வந்தவாசி (தனி)

13. திருவண்ணாமலை தெற்கு மாவட்டம்

செங்கம் (தனி)

திருவண்ணாமலை

கீழ்பென்னாத்தூர்

கலசப்பாக்கம்

14. விழுப்புரம் வடக்கு மாவட்டம்

செஞ்சி

மைலம்

திண்டிவனம் (தனி)

15. விழுப்புரம் மத்திய மாவட்டம்

வானூர் (தனி)

விக்கிரவாண்டி

விழுப்புரம்

திருக்கோவிலூர்

16. விழுப்புரம் தெற்கு மாவட்டம்

உளுந்தூர்பேட்டை

ரிஷிவந்தியம்

சங்கராபுரம்

கள்ளக்குறிச்சி (தனி)

17. கடலூர் வடக்கு மாவட்டம்

நெய்வேலி

பண்ருட்டி

கடலூர்

குறிஞ்சிப்பாடி

18. கடலூர் தெற்கு மாவட்டம்

திட்டக்குடி (தனி)

விருத்தாசலம்

புவனகிரி

சிதம்பரம்

காட்டுமன்னார்கோவில் (தனி)

19. தஞ்சை வடக்கு மாவட்டம்

திருவிடைமருதூர் (தனி)

கும்பகோணம்

பாபநாசம்

திருவையாறு

20. தஞ்சை தெற்கு மாவட்டம்

தஞ்சாவூர்

ஒரத்தநாடு

பட்டுக்கோட்டை

பேராவூரணி

21. நாகை வடக்கு மாவட்டம்

சீர்காழி (தனி)

மயிலாடுதுறை

பூம்புகார்

22. நாகை தெற்கு மாவட்டம்

நாகப்பட்டினம்

கீழ்வேளூர் (தனி)

வேதாரண்யம்

23. திருவாரூர் மாவட்டம்

மன்னார்குடி

திருத்துறைப்பூண்டி (தனி)

திருவாரூர்

நன்னிலம்

24. திருச்சி வடக்கு மாவட்டம்

இலால்குடி

மண்ணச்சநல்லூர்

முசிறி

துறையூர் (தனி) 5

25. திருச்சி தெற்கு மாவட்டம்

மணப்பாறை

திருவரங்கம்

திருச்சி மேற்கு

திருச்சி கிழக்கு

திருவெறும்பூர்

26. பெரம்பலூர் மாவட்டம்

பெரம்பலூர் (தனி)

குன்னம்

27. அரியலூர் மாவட்டம்

அரியலூர்

ஜெயங்கொண்டம்

28. கரூர் மாவட்டம்

அரவக்குறிச்சி

கரூர்

கிருஷ்ணராயபுரம் (தனி)

குளித்தலை

29. புதுக்கோட்டை வடக்கு மாவட்டம்

கந்தர்வகோட்டை (தனி)

புதுக்கோட்டை

விராலிமலை

30. புதுக்கோட்டை தெற்கு மாவட்டம்

திருமயம்

ஆலங்குடி

அறந்தாங்கி

31. சேலம் கிழக்கு மாவட்டம்

கெங்கவல்லி (தனி)

ஆத்தூர் (தனி)

ஏற்காடு (ப.கு)

வீரபாண்டி

32. சேலம் மேற்கு மாவட்டம்

மேட்டூர்

ஓமலூர்

எடப்பாடி

சங்ககிரி

33. சேலம் மாநகர் மாவட்டம்.

சேலம் மேற்கு

சேலம் வடக்கு

சேலம் தெற்கு

34. நாமக்கல் கிழக்கு மாவட்டம்

இராசிபுரம் (தனி)

சேந்தமங்கலம் (ப.கு)

நாமக்கல்

35. நாமக்கல் மேற்கு மாவட்டம்

பரமத்தி வேலூர்

திருச்செங்கோடு

குமாரபாளையம்

36. தருமபுரி மாவட்டம்

பாலக்கோடு

பென்னாகரம்

தருமபுரி

பாப்பிரெட்டிபட்டி

அரூர் (தனி)

37. கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம்

ஊத்தங்கரை (தனி)

பர்கூர்

கிருஷ்ணகிரி

38. கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம்

வேப்பனஹள்ளி

ஒசூர்

தளி

39. கோவை வடக்கு மாவட்டம்

மேட்டுபாளையம்

கவுண்டம்பாளையம்

(மாநகர வட்டங்கள் தவிர )

தொண்டாமுத்தூர்

40. கோவை தெற்கு மாவட்டம்

கிணத்துக்கடவு

பொள்ளாச்சி

வால்பாறை (தனி)

சூலூர்

41. கோவை மாநகர் வடக்கு மாவட்டம்

கவுண்டம்பாளையம்

(மாநகர வட்டங்கள் மட்டும்)

கோவை வடக்கு

42. கோவை மாநகர் தெற்கு மாவட்டம்

கோவை தெற்கு

சிங்காநல்லூர்

43. திருப்பூர் தெற்கு மாவட்டம்

தாராபுரம் (தனி)

காங்கயம்

உடுமலைபேட்டை

மடத்துக்குளம்

44. திருப்பூர் வடக்கு மாவட்டம்

அவிநாசி (தனி)

பல்லடம்

திருப்பூர் வடக்கு

திருப்பூர் தெற்கு

45. ஈரோடு வடக்கு மாவட்டம்

பவானி

அந்தியூர்

கோபிசெட்டிபாளையம்

பவானிசாகர் (தனி)

46. ஈரோடு தெற்கு மாவட்டம்

மொடக்குறிச்சி

பெருந்துறை

ஈரோடு கிழக்கு

ஈரோடு மேற்கு

47. நீலகிரி மாவட்டம்

உதகை

கூடலூர் (தனி)

குன்னூர்

48. மதுரை வடக்கு மாவட்டம்

மேலூர்

சோழவந்தான் (தனி)

மதுரை கிழக்கு

49. மதுரை தெற்கு மாவட்டம்

திருப்பரங்குன்றம்

திருமங்கலம்

உசிலம்பட்டி

50. மதுரை மாநகர் வடக்கு மாவட்டம்

மதுரை வடக்கு

மதுரை தெற்கு

51. மதுரை மாநகர் தெற்கு மாவட்டம்

மதுரை மத்தி

மதுரை மேற்கு

52. திண்டுக்கல் கிழக்கு மாவட்டம்

ஆத்தூர்

நிலக்கோட்டை (தனி)

நத்தம்

திண்டுக்கல்

53. திண்டுக்கல் மேற்கு மாவட்டம்

பழனி

ஒட்டன்சத்திரம்

வேடசந்தூர்

54. தேனி மாவட்டம்

ஆண்டிப்பட்டி

பெரியகுளம் (தனி)

போடிநாயக்கனூர்

கம்பம்

55. ராமநாதபுரம் மாவட்டம்

பரமக்குடி (தனி)

திருவாடானை

இராமநாதபுரம்

முதுகுளத்தூர்

56. சிவகங்கை மாவட்டம்

காரைக்குடி

திருப்பத்தூர்

சிவகங்கை

மானாமதுரை (தனி)

57. விருதுநகர் கிழக்கு மாவட்டம்

விருதுநகர்

அருப்புக்கோட்டை

திருச்சுழி

58. விருதுநகர் மேற்கு மாவட்டம்

சிவகாசி

இராஜபாளையம்

திருவில்லிபுத்தூர் (தனி)

சாத்தூர்

59. திருநெல்வேலி கிழக்கு மாவட்டம்

ஆலங்குளம்

அம்பாசமுத்திரம்

நாங்குநேரி

ராதாபுரம்

60. திருநெல்வேலி மேற்கு மாவட்டம்

சங்கரன்கோவில் (தனி)

வாசுதேவநல்லூர் (தனி)

கடையநல்லூர்

தென்காசி

61. திருநெல்வேலி மாநகர் மாவட்டம்

திருநெல்வேலி

பாளையங்கோட்டை

62 . தூத்துக்குடி வடக்கு மாவட்டம்

விளாத்திகுளம்

ஒட்டபிடாரம் (தனி)

கோவில்பட்டி

63 . தூத்துக்குடி தெற்கு மாவட்டம்

திருச்செந்தூர்

திருவைகுண்டம்

தூத்துக்குடி

64. கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம்

கன்னியாகுமரி

நாகர்கோவில்

குளச்சல்

65. கன்னியாகுமரி மேற்கு மாவட்டம்

பத்மநாபபுரம்

விளவங்கோடு

கிள்ளியூர்

English summary
DMK on Monday restructured its district-level units, almost doubling it to 65, in a bid to revitalise the party ahead of the assembly elections in 2016 in tune with the recommendations of a six-member committee. The decision to create new district units had been taken based on the recommendation of the committee of senior party leaders, DMK general secretary K Anbazhagan said in a party release.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X