For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திமுகவின் முதல் 'தலைவர்' கருணாநிதி... முதல் 'செயல் தலைவர்' ஸ்டாலின்

திமுகவின் செயல் தலைவராக ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார். திமுக பொதுக்குழுவில் ஸ்டாலின் செயல் தலைவராக நியமிக்கப்பட்டார்.

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: திமுக வரலாற்றில் முதல் முறையாக செயல் தலைவர் பதவி உருவாக்கப்பட்டுள்ளது. அக்கட்சியின் செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார்.

திமுகவை அண்ணா தோற்றுவித்தபோது அக்கட்சியில் தலைவர் பதவி என்பது தந்தை பெரியாருக்கானது என்பதால் அப்படி ஒரு பதவியே இல்லாமல் இருந்தது. திமுகவில் பொதுச்செயலர் பதவி என்பதுதான் அனைத்து அதிகாரமும் கொண்டதாக இருந்தது.

1960களில் அவைத் தலைவர் பதவி என்பது திமுகவில் உருவாக்கப்பட்டது. முதலாவது அவைத் தலைவராக ஈவிகேஎஸ் சம்பத் நியமிக்கப்பட்டார். பின்னர் நெடுஞ்செழியன் அவைத் தலைவராக இருந்தார்.

நெடுஞ்செழியன் அதிருப்தி

நெடுஞ்செழியன் அதிருப்தி

அண்ணா மறைந்தபோது நெடுஞ்செழியன் முதல்வராக முயற்சித்தார். ஆனால் கருணாநிதி முதல்வரானார். இதில் நெடுஞ்செழியன் கடும் அதிருப்தி அடைந்தார்.

தலைவர் பதவி உருவாக்கம்

தலைவர் பதவி உருவாக்கம்

அவரை சமாதானப்படுத்தும் விதமாக திமுகவில் தலைவர் பதவி முதன் முதலாக உருவாக்கப்பட்டது. திமுகவின் முதல் தலைவராக கருணாநிதி தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது பொதுச்செயலரானார் நெடுஞ்செழியன்.

செயல் தலைவர் பதவி

செயல் தலைவர் பதவி

தற்போது கருணாநிதி உடல்நலம் குன்றியுள்ள நிலையில் திமுக கட்சி சட்ட விதிகளில் திருத்தம் கொண்டுவரப்பட்டு முதல் முறையாக செயல் தலைவர் பதவி உருவாக்கப்பட்டுள்ளது. திமுகவின் முதலாவது செயல் தலைவராக கருணாநிதியின் மகன் மு.க. ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார்.

சரித்திரம்

சரித்திரம்

ஆக திமுகவின் முதல் தலைவர் கருணாநிதி... முதல் செயல் தலைவர் ஸ்டாலின் என சரித்திரப் பக்கங்களில் இடம்பிடித்திருக்கிறார்கள்.

English summary
The general council of Dravida Munnetra Kazhagam today appointed the treasurer M.K. Stalin as the working president of the party, a post being created.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X