என்ன நடந்தாலும் லீவே எடுக்காதீங்க...போலீசாருக்கு காவல்துறை ஆணையர் ஆர்டர் : வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டசபை கூட்டத்தொடர் முடியும் வரை காவல்துறையினர் விடுப்பு எடுக்கக் கூடாது என காவல்துறை ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.

சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கி ஜூலை 14ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.சட்டசபை கூட்டத் தொடர் முடியும் வரை சென்னை காவல்துறையினர் விடுப்பு எடுக்கக் கூடாது என காவல்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

 Do not take leave untill assembly meet over ordered Police commissioner

இந்த சட்டசபைக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் லஞ்ச வீடியோ, உணவுப் பொருளில் கலப்படம், நீட் தேர்வு உள்ளிட்ட பல பிரச்சனைகளை எழுப்பிக்கொண்டிருப்பதால் கூட்டதொடரில் கூச்சல் குழப்பம் ஏற்படும். எதிர்க்கட்சிகள் போராட்டங்களில் ஈடுபடலாம். ஆகையால், அவற்றை சமாளிக்க காவல்துறை உதவி தேவைப்படுகிறது.

இந்தக் காரணத்தை முன்னிறுத்தி, காவல்துறையினர் விடுப்பு எடுக்கக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மறைந்த முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதிலிருந்து அவர் மறைவு, ஜல்லிக்கட்டு போராட்டம் என அடுத்தடுத்து போலீசார் அதிக பணிச்சுமையில் மன அழுத்தத்தில் வேலை பார்த்துக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Police officials in Chennai should not take leave untill the assembly meeting get over ordered police commissioner of Chennai.
Please Wait while comments are loading...