வேலூர் அருகே பரிதாபம்.. பிரசவத்தின்போது தாயும், சேயும் பலி.. மருத்துவமனை முற்றுகை

Posted By:
Subscribe to Oneindia Tamil
  பிரசவத்தின்போது தாயும், சேயும் பலி.. மருத்துவமனை முற்றுகை | Oneindia Tamil

  வேலூர்: சித்தூர் அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்காக சேர்க்கப்பட்ட பெண்ணும் அவரது குழந்தையும் பலியான சம்பவத்தால் உறவினர்கள் மருத்துவமனையில் போராட்டம் நடத்தினர்.

  வேலூர் மாவட்டம், பெண்ணை பி.என்.பாளையத்தை சேர்ந்த சசிகுமார். இவரது மனைவி ரேவதி. ரேவதி பிரசவத்திற்காக சித்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார் .அவரை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தையின் தலை பெரியதாக இருப்பதால் அறுவை சிகிச்சை செய்துதான் குழந்தையை வெளியே எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

  Doctors carelessness: New born and Mom died while maternal deliver

  இந்நிலையில் பிரசவத்தின் போது குழந்தை இறந்து விட்டதாக கூறிய மருத்துவர்கள் சில மணி நேரங்களில் ரேகாவும் இறந்து விட்டதாக தெரிவித்தனர். மருத்துவர்கள் அலட்சியத்தால்தான் குழந்தையும் ,தாயும் உயிரிழந்ததாக கூறி உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தை நடத்தினர்.

  பின்னர் சடலத்தை வாங்க மறுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். தகவலறிந்த போலீஸார் அவர்களை சமாதானப்படுத்தி சடலத்தை வாங்க வைத்து அனுப்பி வைத்தனர். இதனால் மருத்துவமனை முன்பு பரபரப்பு ஏற்பட்டது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  A lady who admits in Chittoor Government Hospital died while delivering child. At the same time, baby also died. Relatives of the victim protest outside of the hospital.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற