For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முதல்வருடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு.. குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் ஸ்டிரைக் வாபஸ்

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோரிக்கைகளை பரிசீலிப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் நிதியமைச்சர் ஜெயக்குமார் உறுதி அளித்ததால் போராட்டம் திரும்பப்பெறப்பட்டது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களில் சுமார் 350க்கும் மேற்பட்ட குடிரீர் சுத்திகரிக்கும் நிறுவனங்கள் இயங்கி வந்தன. இந்த நிறுவனங்கள் நிலத்தடி நீரை உறிஞ்சுவதாக கூறி சில நிறுவனங்களை சீல் வைத்து அரசு மூடியுள்ளது.

Drinking water cane manufacturers strike Withdraws

மேலும் ஜிஎஸ்டியில் 18% வரி விதிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியாளர்கள் நேற்று மாலை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் குடிநீர் கேன்களின் விலை அதிரடியாக உயர்ந்தது.

குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தத்தால் சென்னையில் குடிநீர் கேன்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதாக பொது மக்கள் குற்றம்சாட்டினர். ஏற்கனவே சென்னையில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் குடிநீர்கேன்களின் இந்த வேலைநிறுத்தத்தால் மக்கள் திணறி வந்தனர்.

இந்நிலையில் குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் நிதியமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையின் போது, அவர்களின் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக உறுதி அளிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூரில் வேலை நிறுத்தம் திரும்பப்பெறப்பட்டது. என்று'கிரேட்டர்' தமிழ்நாடு அடைக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்க காப்பாளர் முரளி தெரிவித்தார். மேலும் இதுதொடர்பாக நிதியமைச்சர் ஜெயக்குமாரை நாளை மதியம் மீண்டும் சந்தித்து பேச உள்ளதாகவும் தெரிவித்தார்.

English summary
chennai, kanchipuram, Thiruvallur water cane manufacturers strike Withdraws after talk with chief minister Edappadi palanisamy
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X