குடிநீருக்காகத் திறந்துவிடப்படும் முல்லைப் பெரியாறு நீரைத் திருடும் பெரும் முதலைகள்: வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

தேனி: முல்லைப் பெரியாறு அணையில் இருந்து குடிநீருக்காகத் திறந்துவிடப்படும் தண்ணீரை பெரும் பண்ணையாளார்கள் மோட்டர் மூலம் தங்கள் பண்ணைகளுக்கு தண்ணீரைத் திருடிக் கொள்ளும் அவலம் நடப்பதால், குடிநீருக்கு தண்ணீர் கிடைப்பதில்லை.

முல்லைப் பெரியாறு அனையில் இருந்து குடிநீருக்காக 705 டிஎம்சி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. ஆனால் இந்த தண்ணீர் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய இயலாமல் போகிறது.

 Drinking water used for irrigation purpose

காரணம், கம்பம் மற்றும் உத்தமபாளையத்திலுள்ள பெரும் பணக்காரர்கள் தங்கள் பண்ணை நிலத்துக்கு குடிநீருக்காகத் திறந்துவிடப்படும் நீரில் போர் அமைத்து, நீரை உறிஞ்சி எடுத்து தங்கள் நிலத்தை வளப்படுத்திக்கொள்கின்றனர். இதனால் குடிநீர் மக்களுக்கு சென்று சேருவதில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

மேலும், பொதுப்பணித்துறை மற்றும் மின்வாரியத் துறை அதிகாரிகளுக்குத் தெரிந்தே இந்த திருட்டு நடக்கிறது என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். ஆகையால் அதிகாரிகள் உரிய நேரத்தில் விழித்துக்கொண்டால் மட்டுமே தண்ணீர் திருட்டு தடுக்கப்படும் என்பது மக்கலீன் கோரிக்கை.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
From Mlullai Periyaru dam, water is opened for drinking purpose. But some of the landlords using it for irrigating their land.
Please Wait while comments are loading...