கொங்குமண்டல அமைச்சர்கள் எல்லாம் ஒண்ணு சேர்ந்துட்டாங்களா? - வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அமைச்சர்கள் செங்கோட்டையன், வேலுமணி, தங்கமணி ஆகியோர் சந்தித்து ஆலோசனை கூட்டம் நடத்தினர். இதில் அதிமுகவின் இரு கோஷ்டிகளும் இணைவது குறித்தும், டிடிவி தினகரனை கட்சியை விட்டு நீக்குவது குறித்தும் ஆலோசிகப்பட்டதாகக் கூறப்படுகிறது.

முதல்வர் எடப்பாடி தலைமையில் அமைச்சர்கள் செங்கோட்டையன், வேலுமணி மற்றும் தங்கமணி ஆகிய முக்கிய அமைச்சர்கள் சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டனர்.

 Edappadi Palanisamy and three more kongu minsters had discussion

அதில் டிடிவி தினகரனை கட்சி பொறுப்பில் இருந்து நீக்குவது, ஒபிஎஸ் கோஷ்டியுடன் இணைவது குறித்து மூன்று மணிநேரம் ஆலோசனை நடத்தப்பட்டது.

ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு எடப்பாடியார், செங்கோட்டையன், வேலுமணி, மற்றும் தங்கமணி ஆகியோர் ஒரே காரில், தலைமைச் செயலகம் சென்றனர். இவர்கள் நால்வரும் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 2016-ல் அதிமுக வெற்றிக்கு கொங்கு மண்டலத்தில் கிடைத்த ஓட்டுக்களும் வெற்றியும் காரணம் ஆகும்.

இன்று மாலைக்குள் ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Tamilnadu chief minister had discussion with ministers Sengottaiyan, Thangamani and velumani regarding the reunion with Ops team.
Please Wait while comments are loading...