சென்னையில் விரைவில் எலக்ட்ரிக் பஸ் வரப் போகுதாம்.... அமைச்சர் அறிவிப்பு: வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

கரூர்: சென்னையில் எலக்ட்ரிக் பேருந்துகள் விரைவில் கொண்டுவரப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

கரூரில் அரசு மருத்துவமனையை பார்வையிடச் சென்றார் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒராண்டு காலமாக இந்த ஆட்சி கவிழ்ந்துவிடும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறிக்கொண்டே உள்ளார். அது ஒருநாளும் நடக்காது.

 Electric buses will be run in Chennai told M.R.Vijayabaskar

மேலும், சென்னையில் முதற்கட்டமாக எலக்ட்ரிக் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. அதற்காக லேலண்டு நிறுவனம் சில மாதிரிகளைக் காண்பித்துள்ளது. டாடா நிறுவனத்துடனும் பேச்சுவார்த்தை நடந்துகொண்டுள்ளது.விரைவில் சென்னையில் மட்டும் 100 எலக்ட்ரிக் பேருந்துகள் இயக்கப்படும் என்றார்.

அதுமட்டுமில்லாமல், செனைக்கு அடுத்தபடியாக மதுரை மற்றும் கோவையில் எலக்ட்ரிக் பேருந்துகள் இயக்க்குவது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் ஆலோசிக்கப்படும் என கூறினார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Electric buses will be run in Chennai told M.R.Vijayabaskar, Transport minister
Please Wait while comments are loading...