For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஊருக்குள் நுழைந்த யானைக் கூட்டம்... போராடி காட்டுக்குள் அனுப்பி வைத்த வனத்துறையினர்: வீடியோ

ஓசூருக்கு அருகில் உள்ள கூடூர்பள்ளம் வனப்பகுதியில் இருந்து யானைகள் கிராமத்துக்குள் நுழைந்து பயிர்களை நாசம் செய்தன. வனத்துறை அதிகாரிகள் 20 நாட்களாகப் போராடி அந்த யானைக் கூட்டத்தை காட்டுக்குள் அனுப்பி வை

By Suganthi
Google Oneindia Tamil News

கிருஷ்ணகிரி: ஓசூர் கூடூர்பள்ளம் வனப்பகுதியிலிருந்து 20 நாட்களுக்கு முன்பு யானைக்கூட்டம் ஊருக்குள் புகுந்தது. மேலும் பயிரிடப்பட்டிருந்த பயிர்களை அவை நாசம் செய்தது. அதனையடுத்து வனத்துறையினர் போராடி அவற்றை காட்டுக்குள் அனுப்பி வைத்தனர்.

சமீபகாலமாக யானைகள் காட்டை விட்டு வெளியேறி ஊருக்குள் புகுந்துவிடுவதால், ஊரில் வாழும் பொதுமக்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கின்றனர். கோடை காலத்தில் காட்டு விலங்குகள் குடிப்பதற்கு நீர் இல்லாத காரணத்தால் அவை தண்ணீர் இருக்கும் இடத்தைத் தேடி வரும்போது ஊருக்குள் வந்துவிடுகின்றன என வன ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

 Elephants came into nearby villages and troubled people in Hosur

இந்த ஆண்டு குறைந்த அளவே மழை பெய்ததால் வனப்பகுதியில் காட்டு விலங்குகள் குடிக்க நீரில்லை. இதனால் யானைகள் மட்டுமின்றி பல விலங்குகள் அருகில் இருக்கும் குடியிருப்புக்குள் வர நேருகிறது.

ஓசூர் கூடூர்பள்ளம் வனப்பகுதியிலிருந்து யானைகள்கூட்டமாக அருகிலிருந்த ஊருக்குள் 20 நாட்களுக்கு முன்னதாக நுழைந்தன. மேலும் அவை பயிரிடப்பட்டிருந்த பயிர்களை அவை நாசம் செய்ததையடுத்து ஊர்பொதுமக்கள் வனத்துறைக்கு புகார் கொடுத்தனர். வனத்துறையினர் யானைகளை காட்டுக்குள் அனுப்ப கடும் முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால் யானைக் கூட்டம் அத்தனை எளிதில் செல்வதாக இல்லை. அவர்களின் பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு அந்தக் யானைக் கூட்டம் காட்டுக்குள் அனுப்பப்பட்டது.

English summary
Elephants came into nearby villages and troubled people. After 20 days of hard work forest department officials sent elephants into forest.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X