செப். 15ல் முக்கிய பிரகடனம் வெளியிடப் போகிறேன்.. வைகோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இயற்கை வளம் மற்றும் தமிழக மக்களின் வாழ்வாதரத்தை அழிப்பதற்கு கார்ப்பரேட் கம்பெனிகளோடு மோடி அரசு கைகோர்த்து செயல்படுகிறது என்று வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் உள்ள தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் நடைபெற்று வரும் ஹைட்ரோ கார்பன் எரிவாயு வழக்கிற்காக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தானே வழக்கில் ஆஜராகி வாதாடினார்.

Expect key announcements on Sep 15, says Vaiko

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த வைகோ, நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்கும் விவகாரத்தில் மத்தியில் ஆளும் மோடி அரசின் ஆதரவோடு ஓஎன்ஜிசி நிறுவனமும் , கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி பிரமுகருக்கு சொந்தமான ஜென் லெபாரெட்டிஸ் நிறுவனத்திற்கு அனுமதி வழக்கி தமிழகத்தின் இயற்கை வளம் மற்றும் தமிழக மக்களின் வாழ்வாதரத்தை அழிப்பதற்கு கார்ப்பரேட் கம்பெனிகளோடு மோடி அரசு கைகோர்த்து செயல்படுவதாக குற்றம் சாட்டினார்.

நீதியரசர் நம்பியார் முன்னிலையில் இன்று வந்த இந்த வழக்கை நவம்பர் மாதத்திற்கு ஒத்தி வைப்பதாக கூறினார் . உடனே நான் கதிராமங்கலம் மற்றும் நெடுவாசலில் கடந்த ஐந்து மாதங்களாக மக்கள் தொடர்ந்து போராடுவதால் நிலைமை இன்னும் மோசமாக ஆகிவிடும் எனக் கூறிய பின்பு , இந்த வழக்கை அக்டோபர் 11 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார் .

நீதிமன்றம் சென்றால் இந்த வழக்கு தமிழக மக்களுக்கு நீதி கிடைக்கும் என்ற காரணத்தால் மோடி அரசு தென் மண்டல பசுமை தீர்ப்பாயத்தை நிரந்தரமாக மூடி விட முயற்சிப்பதாக கூறினார் .

நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை தஞ்சாவூரில் நடைபெறும் பேரறிஞர் அண்ணாவின் 109 வது பிறந்த நாள் விழா மாநாடு மதியம் 1 மணிக்கு ஆரம்பித்து இரவு 7.30 மணிக்குள் முடிவடைய இருக்கிறது.

இந்த மாநாட்டில் தந்தை பெரியார் அறிஞர் அண்ணா அவர்கள் வழியில் தமிழக மாநில வாழ்வாதரத்தை காப்பதற்கு சில முக்கிய முடிவுகளை பிரகடனப்படுத்துவதாக மக்கள் தலைவர் வைகோ கூறினார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
MDMK chief Vaiko has said that the party will announce some key decisions on September 15.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற