For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பேராசிரியர் தகுதி தேர்வில் 5 மார்க்கில் தோல்வி - தீக்குளித்து தற்கொலை செய்த பட்டதாரி இளைஞர்!

Google Oneindia Tamil News

கும்பகோணம்: கும்பகோணம் அருகே, கல்லூரி பேராசிரியருக்கான தகுதி தேர்வில், 5 மதிப்பெண் குறைவாக பெற்று தோல்வி அடைந்ததால், பட்டதாரி இளைஞர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கும்பகோணம் அருகே தேப்பெருமாநல்லூர் முதலியார் தெருவை சேர்ந்த ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் பாலு என்பவரின் மகன் மணிகண்டன். எம்.எஸ்ஸி., எம்.பில் முதுநிலை பட்டதாரியான இவர், கும்பகோணத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஓராண்டு காலம் தற்காலிக ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். கடந்த இரு மாதங்களாக அவர் சரியாக வேலைக்குச் செல்லவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில், கல்லூரி பேராசிரியர் பணிக்காக முயற்சி செய்து வந்த மணிகண்டன், இதற்காக கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற மாநில அரசின் தகுதி தேர்வில் பங்கேற்று தேர்வு எழுதியுள்ளார். இந்த தேர்வுக்கான முடிவுகள் கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. இதில், 5 மதிப்பெண் குறைவாக பெற்று மணிகண்டனன் தோல்வி அடைந்ததாக கூறப்படுகிறது. இவரை விட சுமாராக படித்த பலர் வெற்றி பெற்றதாலும், நிரந்தரமான நல்ல பணி அமையாததால் மணிகண்டனன் விரக்தியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும், திருமணமும் கைகூடுவதில் சிக்கல் நீடித்து வந்தாலும், பெரும் மன அழுத்தம் மற்றும் கடும் மன உளைச்சலிலும் கடந்த சில வாரமாக மணிகண்டன் இருந்து வந்துள்ளார்

Failed in professor exam - graduate youth commits suicide by self-immolation

இந்நிலையில், நேற்றிரவு அவரது குடும்பத்தினர் வீட்டின் கீழே இருக்க, மணிகண்டன் மன அழுத்தத்தின் உச்சத்தில், மாடியில் உள்ள அறைக்கு சென்று, உட்புறமாக தாளிட்டுக் கொண்டு, மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்துள்ளார். வீட்டின் மாடியில் இருந்து புகை வருவது கண்டும், மணிகண்டனின் அலறல் சத்தம் கேட்டும், அவரது குடும்பத்தினரும், அக்கம் பக்கத்தினர் பதறி அடித்துக்கொண்டு மாடிக்குச் சென்று பார்த்துள்ளனர்.

அப்போது, வீட்டின் கதவை உட்புறமாக தாளிடப்பட்ட அறைக்குள், மணிகண்டன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள், உடனடியாக இது குறித்து திருவிடைமருதூர் காவல் நிலையத்திற்கு தகவல் தந்தனர்.

தகவலன் பேரில், திருவிடைமருதூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஜாபர் சாதிக், காவல் ஆய்வாளர் ராமமூர்த்தி தலைமையிலான காவல்துறையினர் சம்பவயிடத்திற்கு விரைந்து வந்து வழக்கு பதிவு செய்து மணிகண்டன் உடலை கைப்பற்றி, உடற்கூறு ஆய்விற்காக, திருவிடைமருதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பேராசிரியர் பணிக்கான தகுதி தேர்வில் தோல்வியுற்றதால், பட்டதாரி இளைஞர் மணிகண்டன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம், தேப்பெருமாநல்லூர் கிராமத்தில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தீக்குளித்து தற்கொலை செய்த 17 வயது சிறுமி.. மரண வாக்குமூலத்தில் வெளியான பகீர் தகவல்! பதறிய பெற்றோர்தீக்குளித்து தற்கொலை செய்த 17 வயது சிறுமி.. மரண வாக்குமூலத்தில் வெளியான பகீர் தகவல்! பதறிய பெற்றோர்

English summary
Near Kumbakonam, a graduate youth set himself on fire after failing in the eligibility test for a college professorship.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X