For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சாயம் போனால்தான் ஒரிஜினல் ரூபாய் நோட்டு..பிரிட்டனிலும் அப்படித்தாங்க.. நம்புங்க

புதிதாக வெளியிடப்பட்டுள்ள 2000 ரூபாய் நோட்டில் சாயம் போனால்தான் ஒரிஜினல் என்பது போலவே பிரிட்டன் கரன்சியில் இருந்தும் சாயம்போனால்தான் ஒரிஜினல்.

Google Oneindia Tamil News

சென்னை: புதிதாக வெளியிடப்பட்டுள்ள 2000 ரூபாய் நோட்டில் ஒரிஜினல் என்றால் அதனை ஈரமான பஞ்சை வைத்து தேய்த்தால் சாயம் ஒட்ட வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. பிரிட்டனில் கூட இப்படித்தாங்க. 50 பவுண்ஸ் நாட்டை சாயம் ஒட்டுதான்னு பார்த்துதான் ஒரிஜினலா இல்லையான்னு
கண்டுபிடிப்பாங்க.

கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. இதனைத் தொடர்ந்து 2000 ரூபாய் புதிய நோட்டையும் வெளியிட்டது. இந்தப் புதிய நோட்டில் இருந்து சாயம் போனால்தான் ஒரிஜனல் என்று சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். ஈரமான பஞ்சை வைத்து தேய்த்தால் லேசாக சாயம் ஒட்டுமாம். அப்படி ஒட்டிவிட்டால் அது ஒரிஜினல் என்று நம்ப வேண்டும் இல்லை என்றால் கள்ள நோட்டு என்று மிகவும் விளக்கமாகவே சக்திகாந்த தாஸ் சொல்லி இருக்கிறார்.

Fake note identification common in Britain’s 50 pounds note and Rs. 2000

சக்திகாந்த தாஸ் அப்படி சொல்லும் போது நமக்கு கூட சிரிப்புத்தான் வரும். ஆனால், முதல் உலக நாடுகளில் ஒன்றாகவும் நம்மை 200 ஆண்டுகள் ஆண்ட நாடாகவும் இருக்கும் பிரிட்டனும் இப்படித்தான் என்றால் சிரிப்பை நிறுத்திவிட்டு சீரியஸ் ஆகிவிடுவீர்கள். நம்ம ஊரில் இருப்பது போன்றே 5, 10, 20, 50 என பவுண்ஸ் நோட்டுகள்
புழக்கத்தில் உள்ளன. உயர்ந்த மதிப்புள்ள 50 பவுண்ஸ் நோட்டு புழக்கத்திலும் சற்று குறைவாக இருக்கும். 10, 20 போன்று கண்ணில் அடிக்கடி தென்படாது. பார்ப்பது ரோஸ் நிறத்தில் பளிச்சென்று 50 பவுண்ஸ் மின்னும்.

இது உயர்ந்த மதிப்பிலான பணம் என்பதால் அதனை கடைக்காரர்களிடம் இருந்து வாங்கும் வாடிக்கையாளர்களும், வாடிக்கையாளர்களிடம் இருந்து கடைக்காரர்கள் வாங்கும் போதும் மிக, மிக எச்சரிக்கையாக இருப்பார்கள். கட்டாக இருந்தால் இயந்திரத்தில் வைத்து ஒரிஜினல், கள்ள நோட்டை கண்டு பிடித்துவிடலாம். அது போன்ற வசதிகள் பெரிய நிறுவனங்களிடம்தான் இருக்கும்.

ஆனால், சாதாரண மக்கள் ஒரிஜினல் நோட்டா என்பதை கண்டுபிடிக்க, 50 பவுண்ஸ் நோட்டை ஒரு ஓரமாக மடித்து பின்னர் அதனை வெள்ளைத் தாளில் வைத்து அழுத்தி தேய்க்க வேண்டும் அல்லது கோடு போன்று இழக்க வேண்டும். அப்போது 50 பவுண்ஸ் நோட்டில் இருந்த ரோஸ் நிறத்தின் சாயம் வெள்ளைத்தாளில் ஒட்டி இருக்க
வேண்டும். அப்படி இருந்தால் நல்ல நோட்டு. இல்லை என்றால் கள்ள நோட்டு என்பது தெரிந்துவிடும்.

ஆக, நம்ம ஊரும் ஃபாரின் ரேஞ்சுக்கு போகுது.. இல்ல..

English summary
Both Britain’s 50 Pounds note and Indian Rs. 2000 note will leave stain on any object when rubbed against.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X