கோவில்பட்டியில் வறட்சி நிவாரணம் வழங்க கோரி விவசாயிகள் ஒப்பாரி போராட்டம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

கோவில்பட்டி: கோவில்பட்டியில் வறட்சி நிவாரணம் வழங்க கோரி விவசாயிகல் ஒப்பாரி வைத்து போராட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டிய இ.எஸ்.ஐ. மருந்தகம் அருகே தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. விவசாயிகள் சங்க மாநில தலைவர் ஓ.ஏ.நாராயணசுவாமி தலைமையில் நடந்தது. இதில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

farmers protest in kovailpatti

இதில் 2015 -2016, 2016-2017 ஆகிய ஆண்டுகளில் விவசாயிகள் செலுத்திய பயிர் காப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க வேண்டும், வறட்சி மாநிலமாக தமிழகம் அறிவிக்கப்பட்ட பின்பு இதுவரை வறட்சி நிவாரணம் வழங்கப்படமால் இருப்பதை கண்டித்தும், உடனடியாக வறட்சி நிவாரணம் வழங்க கோரியும், அனைத்து விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்ட பின்பு அதனை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளதை வாபஸ் பெற வேண்டும், பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

farmers protest in kovailpatti

இந்த போராட்டத்தின் ஒருபகுதியாக நேற்று மாலை விவசாயிகள் நின்று கொண்டு பிச்சையெடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து முட்டிகால் போட்டும், தரையில் படுத்தவாறு பிச்சையெடுக்கும் போராட்டம் நடத்தினர்.

farmers protest in kovailpatti

தொடர்ந்து போராட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் ஓப்பாரி வைத்து தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தினர். மேலும் தங்களது கோரிக்கை நிறைவேறும் வரை காத்தியிருப்பு போராட்டத்தில் ஈடுபடபோவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
farmers continue protest in kovilpatti, tuticorin district
Please Wait while comments are loading...