For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முன்னறிவிப்பின்றி தண்ணீர் தேக்கியதால் விளைநீரில் பாய்ந்த காவேரி!

Google Oneindia Tamil News

கரூர்: கரூர் மாவட்டம் மாயனூரில் உள்ள கதவணையில், முன்னறிவிப்பின்றி தண்ணீர் தேக்கியதால் காவேரி நீர் விளை நிலங்களில் பாய்ந்து பயிர்கள் நாசமடைந்தன. இதையடுத்து இழப்பீடு வழங்ககோரி விவசாயிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கரூர் மாவட்டத்தில் காவேரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு அண்மையில் பயன்பாட்டிற்கு திறந்து விடப்பட்ட கதவணையில் 1.05 டி.எம்.சி வரை தண்ணீரை தேக்கிவைப்பதற்க்கு ஏதுவாக கட்டப்படிருந்தது.

தற்போது தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருவதுபோன்று காவேரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் உபரியாக வருகின்ற நீரை தேக்கி வைக்க ஆற்றுபாதுகாப்புதுறை மற்றும் பொதுப்பனித்துறை முடிவு செய்து முன்னறிவிப்பின்றி திடீரென கதவணையின் ஷட்டர்களை இறக்கி தண்ணீரை தேக்கி உள்ளனர்.

இதனால் மாயனூர் அணைக்கு அருகேயுள்ள கீழமாயனூர் ,. மேலமாயனூர் உட்பட சுமார் 300 ஏக்கர் அளவிற்கு தண்ணீர் தேங்கியதால் இப்பகுதில் விவசாயம் செய்த விளை நிலங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் திடீரென கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

Farmers stage road roko near Karur

இதனால் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து விவசாயி ஒருவர் கூறுகையில், அணைக்கு அருகே உள்ள விளை நிலங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் பாதுகாப்பு அம்சங்களை கருத்தில் கொள்ளாமல் அணையில் நீரை தேக்கியதால் முற்றிலுமாக எங்களது விளை நிலங்கள் பாதிக்கப்பட்டதாக தெரிவித்த அவர் எங்களுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றார்.

English summary
Number of Farmers staged road roko near Karur after the PWD officials lowered the shutters in Mayanur check dam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X