For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தி நகர் சென்னை சில்க்ஸ் கட்டிடத்தின் சுவர் இடிந்து விழுந்தது.. தீயணைப்பு வீரர்கள் பலர் காயம்

தி நகர் சென்னை சில்க்ஸ் கட்டிடத்தின் முகப்பு சுவர் இடிந்து விழுந்ததில் தீயணைப்பு வீரர்கள் காயமடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: சென்னை சில்க்ஸ் கட்டிடத்தில் ஏற்பட்டுள்ள தீ காற்றின் வேகத்தில் கொழுந்து விட்டு எரிகிறது. இந்நிலையில் தீயை அணைக்கும் பணியில் ஈடுட்டிருந்த தீயணைப்பு வீரர்கள் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தி சென்னை சில்க்ஸ் கடையில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டது. தகவறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து 15 மணி நேரமாக தீயை அணைக்கும் முயற்சியில் ஷிப்ட் முறையில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 150 வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தீயை அணைக்கும் பணியில் மாநகராட்சி தண்ணீர் லாரிகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இருந்த போதிலும் அதிகளவு புகை வெளியேறுவதால் தீயை அணைப்பது பெரும் சவாலாக உள்ளதாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

Fire fighter injuries due to Chennai Silks fire

ஆஸ்துமா நோய் உள்ளவர்கள் இந்தப் பகுதிக்கு வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொது மக்களுக்கு தேவையான வசதிகள் செய்து தர ஆம்புலன்ஸ் வாகனம் தயார் நிலையில் உள்ளது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டிட ஏற்பட்ட தீ விபத்தால் அதிகளவில் புகை வெளியேறியதால் மூச்சுத்திணறல் மற்றும் கண் எரிச்சல் காரணமாக பொதுமக்கள் பாதிப்பட்டுள்ளனர். துரைசாமி சுரங்கப்பாதை, கோடம்பாக்கம், வடக்கு உஸ்மான் சாலை உள்ளிட்ட பகுதிகளில் கண் எரிச்சல் காரணமாக வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.

மேலும் கட்டிடத்திற்கு அருகாமையில் உள்ளவர்கள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கனவே அந்த பகுதி அபாயகரமான பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் காலை முதல் பற்றி எரியும் தீயை அணைக்கும் பணியில் 15 மணி நேரத்திற்கும் மேலாக தீயைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். காற்று அதிகமாக வீசுவதால் தீயை அணைப்பது பெரும் சவாலாக உள்ளது. இதனிடையே கட்டிடத்தின் மேல் தளத்தில் தீயை அணைத்துக் கொண்டிருந்த போது முகப்பு சுவர் இடிந்து

விழுந்தது. இதில் சில தீயணைப்பு வீரர்கள் காயமடைந்ததாகவும தவகல்கள் தெரிவிக்கின்றன. இதனால் தீ விபத்தது நடந்த பகுதியை பார்க்க பொதுமக்கள் யாரும் இப்பகுதிக்கு வரவேண்டாம் என்று மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும் அறிவுறுத்தியுள்ளனர். தொடர்ந்து அந்த பகுதியில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது.

English summary
fighter injuries due to a major fire in Chennai Silks
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X