கூவம் ஆற்றில் துள்ளும் விரால், கெண்டை மீன்கள்.. ஆச்சரியமாக பார்க்கும் சென்னைவாசிகள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் திருவேற்காடு அருகே வரும் கூவம் ஆற்றில் விரால் மீன்கள் கிடைப்பது ஆச்சரியம் ஏற்படுத்தியுள்ளது.

"கிலோ கிலோவாக மீனுங்க வர்து, நாங்க மீனுவள பிடிச்சிட்டு வீட்டுக்கு போறோம், ஜாலியா இருக்கு, சந்தோஷமா புடிச்சிட்டு போறோம். வலைய போடுறோம், மீன புடிக்கிறோம்" எனச் சொல்லி ஆர்ப்பரிக்கிறார்கள், அங்கு மீன் பிடிக்க வந்த சிறுவர்கள்.

Fishes found in Cooum river at Thiruverkadu in Chennai

பொதுமக்கள் பலரும் அந்த பகுதிக்கு வந்து மீன்கள் துள்ளுவதை வேடிக்கை பார்த்துச் செல்வதால் அந்த இடம் சுற்றுலா தலமாக மாறியுள்ளது.

விரால் மீன்கள், கெண்டை மீன்கள் பரவலாக கிடைக்கின்றன. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள பல ஏரிகளும் நிரம்பி, கூவம் நதியில் கலந்துள்ளதால் ஏரி மீன்கள் கூவத்தில் அடித்து வரப்பட்டுள்ளன என்று கூறப்படுகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Fishes found in Cooum river at Thiruverkadu in Chennai. Childrens starting fishing activity with nets in there, tourist visit there.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற