மீண்டும் கனமழை... சென்னை சாலைகளில் மீண்டும் ‘படகு போக்குவரத்து’ தொடக்கம்
சென்னை: கனமழையைத் தொடர்ந்து மீண்டும் சென்னை புறநகர் பகுதிகளில் குடியிருப்போரை படகு மூலம் மீட்கும் பணி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த இரண்டு வாரங்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. சென்னையில் கடந்த வாரம் தொடர்ந்து கனமழை பெய்ததால், சாலைகளில் மழை நீர் வெள்ளமென ஓடியது. புறநகர் பகுதிகளில் வீடுகளுக்குள் நீர் புகுந்ததால் மக்கள் படகுகள் மூலம் வெளியேற்றப்பட்டனர்.
பின்னர் மழை சற்று குறைந்ததைத் தொடர்ந்து மழை நீர் வடியத் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து மீண்டும் மக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பத் தொடங்கினர்.

மீண்டும் மழை...
இந்நிலையில், கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் சென்னையில் கனமழை பெய்து வருகிறது. பகலில் வெயிலும், மழையும் என வானிலை மாறி மாறி உள்ளது. இதனால் நீர் நிலைகள் நிரம்பி மீண்டும் குடியிருப்புப் பகுதிகளில் நீர் புகுந்துள்ளது.

வாகன ஓட்டிகள் சிரமம்...
சாலைகளிலும் மழை நீர் வெள்ளமென ஓடுவதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

மீட்புப் பணி...
சென்னை மேற்குத் தாம்பரம் பகுதியில் வீடுகளுக்குள் சிக்கியுள்ள மக்களை தீயணைப்புத் துறையினர் படகுகள் மூலம் மீண்டும் மீட்கும் பணியைத் தொடங்கியுள்ளனர்.

மக்கள் கவலை...
வெள்ளநீர் வீடுகளுக்குள் புகுந்ததால் பழுதான வாகனங்கள், தண்ணீர் மோட்டார், டிவி, பிரிட்ஜ் போன்றவற்றை ரிப்பேர் செய்து இப்போது தான் மீண்டும் அப்பகுதி மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பத் தொடங்கியிருந்தனர். இந்த நிலையில், மீண்டும் மழை நீர் சூழ்ந்ததால் வீடுகளை விட்டு வெளியேறும் வேதனையில் அவர்கள் உள்ளனர். மீண்டும் எங்கே செல்வது, பழுதான பொருட்களை சரி செய்ய மீண்டும் பணம் தேவைப்படுமே என்ற கவலை அவர்கள் அனைவரது முகத்தில் காணப்படுகிறது.
-
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
Mayor Priya: சென்னை மேயர் பிரியாவுக்கு உடல்நலக் குறைவு! காலில் என்ன ஆனது? -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
4 நாளைக்கு மழை தான்.. இன்னைக்கும் 14 மாவட்டங்களில் மழை பிச்சுக்கப் போகுது! ஐஎம்டி கொடுத்த அப்டேட்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள்












Click it and Unblock the Notifications