நெல்லை மாவட்டத்தில் ஆற்று பாலத்தையே அடித்துச் சென்ற வெள்ளம்.. இடிதாக்கி தேவாலய சிலை இடி விழுந்தது

Posted By:
Subscribe to Oneindia Tamil

நெல்லை: கன மழை காரணமாக நெல்லை மாவட்டத்தில் ஒரு ஆற்று பாலம் அடித்துச் செல்லப்பட்டது.

வடகிழக்குப் பருவமழையினால் சென்னை மற்றும் வடக்கு கடலோர மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கன மழை பெய்தது. இந்த நிலையில், மழையை பார்த்து அதிசயிக்கும் வகையில் உள்ள தென் மாவட்டங்களிலும் நேற்று முதல் மழை பெய்ய தொடங்கியது.

Flooding river wash away bridge in Nellai district

நெல்லையில் ஏற்பட்ட பலத்த மழையால் பேட்டை பகுதியில் வீடு, கடைகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

நெல்லை மாவடடம் ராதாபுரம் தாலுகா மிக, மிக வறண்ட பகுதியாகும். மழை மறைவு பிரதேசமாகும். ஆனால் நேற்று அங்கும் அதிசயமாக மழை பெய்தது. ராதாபுரம் தாலுக்காவில் உள்ள கூத்தன்குழி கிராமத்தின் அருகேயுள்ள ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அங்கு போடப்பட்டிருந்த சிறிய பாலம் ஒன்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.

இடி தாக்கியதால், கூத்தன்குழி தேவாலயத்திலுள்ள ஒரு சொரூபத்தின் ஒரு பக்க கை துண்டாகி விழுந்துள்ளது. அங்கிருந்த மீன்பிடி படகுகளும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Flooding river and channel washed away portion of a small bridge in Nellai district.
Please Wait while comments are loading...