For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விஜயகாந்தைச் சந்தித்தார் வாசன்... காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு அழைப்பு!

By Shankar
Google Oneindia Tamil News

GK Vasan meets Vijayakanth
சென்னை: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான மத்திய அமைச்சர் ஜிகே வாசன், நேற்று திடீரெனதேமுதிக தலைவர் விஜயகாந்த்தைச் சந்தித்தார்.

இது தமிழக தேர்தல் களத்தில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில, யார் யாருடன் கூட்டணி வைக்கிறார்கள் என்ற தெளிவு இன்னும் ஏற்படவில்லை.

தேமுதிகவுடன் கூட்டணிக்கு தயார் என வெளிப்படையாகவே திமுக தலைவர் கருணாநிதி கூறிவிட்டார்.

இந்த சூழலில், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை அவரது இல்லத்தில் மத்திய மந்திரி ஜி.கே.வாசன் நேற்று இரவு 7 மணிக்கு திடீரென்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் நடந்தது. இந்த சந்திப்பின் போது பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு தே.மு.தி.க. வர வேண்டும் என்று ஜி.கே.வாசன் அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது.

தே.மு.தி.க.வை தங்கள் கூட்டணிக்குள் கொண்டு வருவதற்கு பாரதீய ஜனதா கட்சியும் முயற்சித்து வரும் சூழ்நிலையில் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் திடீரென்று விஜயகாந்தை சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து காங்கிரஸ் தரப்பில் கேட்ட போது, சந்திப்பு நடந்தது உண்மைதான். மற்ற விவரங்களை தற்போது தெரிவிக்க இயலாது என்று தெரிவித்தனர்.

English summary
Union Minister GK Vasan has met DMDK president GK Vasan and invited him for congress alliance.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X