For Daily Alerts
நான் சொல்ற ஆன்மீக அரசியலுக்கு விளக்கம் இதுதான்... ரஜினிகாந்த் அதிரடி

எம்.ஜி.ஆர் சிலையைத் திறந்து வைத்த ரஜினியின் பரபரப்பு பேச்சு- வீடியோ
சென்னை: தாம் முன்வைக்கிற ஆன்மீக அரசியல் என்பது ஜாதி, மதம் இல்லாத நேர்மையானது என ரஜினிகாந்த் அதிரடியாக விளக்கம் தந்துள்ளார்.
வேலப்பன்சாவடியில் உள்ள எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் எம்ஜிஆரின் வெண்கல சிலையை ரஜினிகாந்த் திறந்து வைத்தார். இதில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இதில் ரஜினிகாந்த ரசிகர்கள் முன்னிலையில் பேசினார். அதில் '' ஆன்மீக அரசியல் என்பது மக்களுக்கான அரசியல். ஊழலற்ற அரசியல்தான் ஆன்மீக அரசியல் '' என்றார்.
மேலும் ''சாதி, மதமற்ற நேர்மையான அரசியலே ஆன்மிக அரசியல். இனிமேல்தான் பார்க்க போகிறீர்கள் ஆன்மீக அரசியல் '' என்றார்.
இவரது ஆன்மீக அரசியல் விளக்கத்திற்கு பெரிய அளவில் ரசிகர்கள் கைத்தட்டி கரகோஷம் எழுப்பினார்கள்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!