For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பொங்கல் வைக்க மட்டும்தானா நல்ல நேரம்.. வேட்பு மனு தாக்கலுக்கும் "டைம்" இருக்காம்!

Google Oneindia Tamil News

சென்னை: முன்பெல்லாம் பொங்கல் வைக்க, தீபாவளியன்று தலைக்குக் குளிக்க போன்றவற்றுக்குத்தான் நல்ல நேரம் குறித்த செய்திகள் வரும். ஆனால் தற்போது வேட்பு மனு தாக்கல் செய்ய எது உகந்த நேரம் என்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகும் அளவுக்கு நிலைமை போய் விட்டது.

சட்டசபைத் தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்ய எது உகந்த நேரம் என்பது குறித்து ஜோதிடர்கள் கூற ஆரம்பித்துள்ளனர். அத விட வெற்றிக்கான டிப்ஸ்கள் குறித்தும் கூறியுள்ளனர் ஜோதிடர்கள்.

Good muhurtham for filing of nomination papers

மேலும் அதிர்ஷ்டம் தரும் விஷயங்களையும் ஜோதிடர்கள் விவரிக்கின்றனர். இதுகுறித்து நாம் பார்த்த, படித்த ஜோதிட ஆலோசனையிலிருந்து சில துளிகள்...!

  • தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியுள்ளது.
  • இன்று மனுத் தாக்கல் செய்ய நல்ல நேரமாக பிற்பகல் 1.38லிருந்து மாலை 3.41 என ஜோதிடர்கள் குறித்துள்ளனராம்.
  • 1, 3, 6, 9 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் பிற்பகல் 1.38 மணி முதல் 2.16க்குள் வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டுமாம்.
  • மனுத் தாக்கல் செய்யப் போகும்போது பச்சை அல்லது சிவப்பு நிற உடையில் போவது உசிமாம்.
  • முருகனைக் கும்பிட்டு விட்டு செல்வது இன்னும் நல்லது என்று சொல்கிறார்கள் ஜோதிடர்கள்.
  • 2,5,7 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் பிற்பகல் 2.30 முதல் 3.22க்குள் மனு தாக்கல் செய்ய வேண்டுமாம்.
  • மகரம், விருச்சிகம், சிம்மம், மேஷம் மற்றும் கன்னி ராசிக்காரர்களைத் தவிர மற்றவர்களுக்கு ஏப்ரல் 25ம் தேதி ஆகாத தினமாம்.
  • ஏப்ரல் 25ல்தான் அதிமுக வேட்பாளர்கள் மனுத் தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
  • ஏப்ரல் 22ம் தேதியான இன்று பிரதமை என்றாலும் கூட , நட்சத்திரங்களின் கூட்டு சிறப்பாக உள்ளதால், இன்று மனு தாக்கல் செய்ய நல்ல நாளாகுமாம்.
English summary
Astrologists have suggested good muhurtham for filing of nomination papers for the assembly election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X