For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டாஸ்மாக் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு- அமைச்சர் தங்கமணி அறிவிப்பு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: டாஸ்மாக் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அளிக்கப்படுவதாக சட்டசபையில் பேசிய அமைச்சர் தங்கமணி அறிவித்தார். இந்த சம்பள உயர்வு செப்டம்பர் மாதம் முதல் அமலுக்கு வர உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அமைச்சர் தங்கமணி பேசுகையில், டாஸ்மாக் ஊழியர்களின் சம்பள உயர்விற்காக ரூ.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மதுபானத்திற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரத்திற்காக ரூ.3 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

Government has hiked salary of TASMAC employees - Minister Thangamani

தமிழக சட்டசபையில் இன்று அமைச்சர் தங்கமணி பேசியபோது டாஸ்மாக் ஊழியர்களுக்கான சம்பள உயர்வினை அறிவித்தார். அப்போது அவர், தமிழகத்தில் டாஸ்மாக் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்படும். மேற்பார்வையாளர்களுக்கு ரூ.500, விற்பனையாளர்களுக்கு ரூ.400 மற்றும் உதவி விற்பனையாளர்களுக்கு ரூ.300 என்ற அளவில் ஊதியம் உயர்த்தப்படும் என்று கூறினார்.

இந்த ஊதிய உயர்வு செப்டம்பர் மாதத்தில் இருந்து அமலாகும். இதன்மூலம் 26634 ஊழியர்கள் பயனடைவார்கள். கள்ளச்சாராய தொழிலில் ஈடுபட்டு மனந்திருந்தியவர்களின் மறுவாழ்விற்காக ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் மதுபானத்திற்கு எதிரான விழிப்புணர்வு மேற்கொள்வதற்கு ரூ.3 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

English summary
Minister Thangamani Said in Assembly on Thursday said the government had increased the salary of the TASMAC outlets employees.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X