சட்டசபை செயலர் நியமனத்தை கவர்னர் ரத்து செய்ய வேண்டும்.. ஸ்டாலின் அறிக்கை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டசபை செயலர் நியமனத்தில் நெறிமுறைகளை பின்பற்றவில்லை என்பதால் அதை ரத்து செய்ய வேண்டும் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.

தமிழக சட்டசபை செயலராக சீனிவாசன் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். இவரது நியமனத்திற்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் வழங்கி இருக்கிறார்.

Governor should revoke the appointment of Tamilnadu Assembly Secretary asks Stalin

இந்த நிலையில் சட்டசபை செயலர் நியமனத்தில் நெறிமுறைகளை பின்பற்றவில்லை என்று ஸ்டாலின் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

அதன்படி "கல்வி தகுதி, பணி அனுபவம் உள்ளிட்ட எந்த தகுதிகளும் இதில் பின்பற்றப்படவில்லை. இதில் நிறைய விதி மீறல்கள் செய்யப்பட்டு இருக்கிறது.'' என்றுள்ளார்.

மேலும் ''இது முழுக்கு முழுக்கு சட்டத்திற்கு புறம்பானது. இதற்கு கவர்னர் ஏன் ஒப்புதல் அளித்தார், எப்படி அளித்தார் என்று தெரியவில்லை'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

மேலும் உடனடியாக சட்டசபை செயலர் நியமனத்தை கவர்னர் ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்து இருக்கிறார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Governor should revoke the appointment of Tamilnadu Assembly Secretary asks Stalin. He says that no rules have followed in this appointment.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற