For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கிரீன்பீஸ் என்.ஜி.ஓக்கு நெருக்கடி.. விதிமீறல்கள் குறித்து நோட்டீஸ்.. இந்தியாவை விட்டு வெளியேறும்?

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: சர்ச்சைக்குரிய சுற்றுச் சூழல் என்.ஜி.ஓவான கிரீன்பீஸ் அமைப்பின் விதிமீறல் செயல்பாடுகள் குறித்து தமிழக அரசு விளக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த நோட்டீஸுக்கு உரிய பதிலளிக்காமல் போனால் இந்தியாவை விட்டு அந்த என்.ஜி.ஓ. வெளியேற வேண்டிய நிலை உருவாகும் என்கின்றன டெல்லி வட்டாரங்கள்.

கிரீன்பீஸ் அமைப்பு என்பது சர்வதேச சுற்றுச் சூழல் என்.ஜி.ஓ. இந்த அமைப்பானது நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுபடுவதாக கூறி அதன் 7 வங்கிக் கணக்குகளை மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்கெனவே முடக்க உத்தரவிட்டது. பின்னர் அதன் 2 வங்கிக் கணக்குகளை பயன்படுத்த நீதிமன்றம் அனுமதி அளித்தது.

Greenpeace India faces cancellation of registration

மேலும் வெளிநாட்டு நிதி உதவி சட்டத்தின் கீழ் கிரீன்பீஸ் அமைப்பின் பதிவையும் ரத்து செய்தது மத்திய உள்துறை அமைச்சகம். இந்த நிலையில் தமிழகத்தில் செயல்பட்டு வந்த கிரீன்பீஸ் என்.ஜி.ஓ. அமைப்பானது தற்போது பெங்களூருக்கு 'ஜாகை'யை மாற்றியுள்ளது.

இது தமிழ்நாட்டு சொசைட்டி சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட என்.ஜி.ஓ.. இதன் செயல்பாடுகள் குறித்து சென்னையில் உள்ள அலுவலகத்தில் சோதனை நடத்தி தமிழக அரசு விளக்க நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அதில் ஆவணங்களை முறையாகப் பராமரிக்காத உங்களது அமைப்பின் இந்திய பதிவை ஏன் ரத்து செய்யக் கூடாது என விளக்கம் தருமாறும் கோரப்பட்டிருந்தது.

அத்துடன் தமிழகத்தில் உள்ள கிரீன்பீஸ் அலுவலகத்தை சோதனையிட்ட போது அதன் தலைமையகம் பெங்களூருவில் இருக்கிறது என குறிப்பிடப்பட்டிருந்தது. அதாவது தமிழக பதிவுகள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட ஒரு என்.ஜி.ஓ.வின் தலைமை அலுவலகம் பெங்களூருவில் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. முகவரிகளில் ஏன் இந்த குழப்பம் என்று கேட்டும் கிரீன்பீஸ் அமைப்புக்கு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டது.

கடந்த ஜூன் 16-ந் தேதியன்று இந்த நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டு 8 நாட்களுக்குள் பதிலளிக்குமாறு உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால் அந்த நோட்டீஸுக்கு எந்த பதிலையும் கிரீன்பீஸ் அமைப்பு தரவில்லை.

அதற்கு மாறாக பதிலளிக்க கூடுதல் அவகாசம் கோரியிருக்கிறது. இந்த அவகாசம் கொடுக்கப்பட்ட நிலையிலும் கிரீன்பீஸ் அமைப்பு உரிய பதிலளிக்காது போனால் இந்தியாவில் இருந்து மூட்டை முடிச்சை கட்டிக் கொண்டு வெளியேற வேண்டிய நிலைதான் உருவாகும் என்கின்றன வெளியுறவுத் துறை வட்டாரங்கள்.

English summary
Greenpeace India, debarred from receiving foreign funds since April, now stares at a shutdown with the Tamil Nadu Inspector of Registration issuing it a show-cause notice for cancellation of its registration as a society under the Tamil Nadu Societies Registration Act, 1975.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X