For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் எச் ராஜா போட்டியா? புகழேந்தி போட்ட புது குண்டு!

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் எச்.ராஜா தான் அதிமுக வேட்பாளர் என நம்ப தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் வந்திருப்பதாக தினகரன் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

மதுரை: திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் எச்.ராஜா தான் அதிமுக வேட்பாளர் என நம்ப தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் வந்திருப்பதாக தினகரன் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

திருப்பரங்குன்றத்தில் எம்எல்ஏவாக இருந்த ஏ.கே.போஸ் கடந்த ஆகஸ்ட் மாதம் மாரடைப்பால் உயிரிழந்தார். இதனால், 2016 சட்டப்பேரவை தேர்தலுக்குப் பிறகு அத்தொகுதியில் இரண்டாவது முறையாக இடைத்தேர்தல் நடத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

முன்னதாக, அங்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுக எம்எல்ஏ சீனிவேலு பதவியேற்பதற்கு முன்பே உயிரிழந்தார். அதன்பிறகு நடைபெற்ற இடைத்தேர்தலில் ஏ.கே.போஸ் போட்டியிட்டு வெற்றி பெற்றார். திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் வெற்றி பெறுவதற்காக அதிமுக, திமுக, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கட்சிகள் இப்போதே தீயாய் வேலைசெய்ய தொடங்கிவிட்டனர்.

[மறுபடியும் எச்.ராஜாவின் தூக்கத்தை கெடுக்கும் விஜய்! தெறிக்க விடும் சர்கார் பாடல்]

புகழேந்தி தகவல்

புகழேந்தி தகவல்

இந்நிலையில், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா நிறுத்தப்படுவார் என தினகரன் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

எச் ராஜா அதிமுக வேட்பாளர்?

எச் ராஜா அதிமுக வேட்பாளர்?

இது தொடர்பாக மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய புகழேந்தி, " திருப்பரங்குன்றத்தில் அதிமுக நிற்காமல் பாஜகவுடன் கூட்டணி வைத்து எச்.ராஜாவுக்கு சீட் தரப் போகின்றனர். ஆக, எச்.ராஜாதான் திருப்பரங்குன்றத்தில் அதிமுக வேட்பாளர். நம்பத்தகுந்த வட்டாரங்கள் இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ளன.

எச் ராஜாவை புகழ்கின்றனர்

எச் ராஜாவை புகழ்கின்றனர்

அதனால்தான் அதிமுக அமைச்சர்கள் எம்ஜிஆரை விட எச் ராஜாவையே அதிகம் புகழ்கின்றனர். அமைச்சர் உதயகுமார் எப்போதும் எச் ராஜாவை புகழ்ந்து தள்ளுகிறார். எம்ஜிஆரின் சரித்திரம் தெரியாதவர்கள்.

70 எம்எல்ஏக்கள் ஆதரவு

70 எம்எல்ஏக்கள் ஆதரவு

எம்ஜிஆர் நுற்றாண்டு நிறைவு விழா எடப்பாடி பழனிச்சாமியின் புகழ்பாடும் விழாவாக இருந்தது. ஆட்சி கலைந்துவிடும் என்ற பயத்தில் அனைவரும் ஒருமையில் பேசி வருகின்றனர். அதிமுக எம்எல்ஏக்கள் 60 முதல் 70 பேர் வரை ஆதரவு தெரிவிக்க தயராக உள்ளனர்." இவ்வாறு தினகரனின் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்தார்.

English summary
TTV Dinakaran supporter Pugazhendi says H Raja is the candidate of ADMK in Thirupparankundram by poll. Pugazhendi said in Madurai press meet.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X