பெரியார் சிலையை அகற்றுவதாக எச்.ராஜா கூறியதற்கு வலுக்கும் கண்டனம்

சென்னை: பெரியார் சிலை தமிழகத்தில் அகற்றப்படும் என்று எச். ராஜா கூறியதற்கு அரசியல் கட்சிகள் கண்டனத்தை தெரிவித்துள்ளன.
திரிபுராவில் பாஜக ஆட்சி அமைக்கவுள்ளதை தொடர்ந்து அங்குள்ள லெனின் சிலை அகற்றப்பட்டது. இதற்கு பல்வேறு கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

இந்நிலையில் பெரியார் சிலை அகற்றுவது குறித்து ஒரு டுவீட் போட்டுள்ளார். அதில் லெனின் யார் அவருக்கும் இந்தியாவிற்கும் என்ன தொடர்பு. கம்யூனிசத்திற்கும் இந்தியாவிற்கும் என்ன தொடர்பு, லெனின் சிலை உடைக்கப்பட்டது திரிபுராவில். இன்று திரிபுராவில் லெனின் சிலை , நாளை தமிழகத்தில் சாதி வெறியர் ஈவேரா ராமசாமியின் சிலை என்று கூறியுள்ளார்.
இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவிக்கின்றன. இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் கூறுகையில் யார் அகற்றப்படும் என்று கூறுகிறாரோ அவரும் அகற்றப்படுவார்.
சட்டம்-ஒழுங்கை காப்பாற்ற தமிழக அரசு எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!