For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எப்டியாவது பொங்கலுக்கு ஊருக்கு போய்டணும்... ரயில்களில் முண்டியடிக்கும் மக்கள் கூட்டம்!

Google Oneindia Tamil News

சென்னை: பொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாடிட வேண்டி வெளியூர் செல்லும் மக்களின் கூட்டத்தால் சென்னை ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை நாளை மறுநாள் (15ம் தேதி) கொண்டாடப்படுகிறது. இதை கொண்டாட நகர பகுதிகளில் வசிக்கும் மக்கள், தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்ற வண்ணம் உள்ளனர்.

இதனால் பஸ் மற்றும் ரயில்களின் முன்பதிவு இருக்கைகள் அனைத்தும் நிரம்பிவிட்டன. குறிப்பாக சென் னையில் இருந்து கோவை மற்றும் தென் மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு செல் லும் ரயில்கள் அனைத்தும் நிரம்பின.

இதன் காரணமாக சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்ல 22 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டன. இதேபோல் சுமார் 7 ஆயிரத்திற்கும் அதிகமான சிறப்புப் பேருந்துகளும் அறிவிக்கப் பட்டன.

ரயில் தான் பெஸ்ட்...

ரயில் தான் பெஸ்ட்...

ஆனால், கழிப்பறை வசதி மற்றும் அவ்வப்போது டீ, காபி, டிபன் உள்ளிட்ட சாப்பாடு வசதி உள்ளிட்ட காரணங்களால் பெரும்பாலான மக்களின் முதல்தேர்வு ரயில் பயணமாகத் தான் இருக்கிறது.

அலைமோதிய கூட்டம்...

அலைமோதிய கூட்டம்...

அந்தவகையில், ரயில்களில் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் பயணம் செய்வதற்காக ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதுகிறது.

பாதுகாப்பு பணி...

பாதுகாப்பு பணி...

அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் வகையில் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் முன்பதிவு செய்யாத பெட்டிகளில் பயணிகளை வரிசையில் நிற்க வைத்து அமைதியான முறையில் இடவசதி ஏற்படுத்திக் கொடுத்தனர்.

நீண்ட வரிசை...

நீண்ட வரிசை...

முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் இடம் பிடிப்பதற்காக மக்கள் நீண்ட நேரம் வரிசையில் இடம் பிடித்துக் காத்திருந்தனர். ஆனால், களைப்பை விட எப்படியும் பொங்கலை சொந்த ஊரில் கொண்டாடிட வேண்டும் என்ற ஆர்வம் அங்கிருந்த அனைத்து மக்களின் முகங்களிலும் பிரதிபலித்தது.

English summary
As the Pongal holidays are starting from tomorrow, people have started moving to their home towns from today. So the railway stations in Chennai were overflowing with people crowd.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X