சென்னையின் பல இடங்களில் இடியுடன் கனமழை.. விட்டு விட்டு கொட்டித்தீர்க்கும் மழையால் மக்கள் மகிழ்ச்சி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பெரும்பாலான இடங்களில் இடியுடன் கனமழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

சென்னை வளசரவாக்கம், விருகம்பாக்கம், ராமாபுரம், கோயம்பேடு, அண்ணாநகர், அம்பத்தூர் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் மாலை முதலே கனமழை கொட்டி வருகிறது. சுமார் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக விட்டு விட்டு இடியுடன் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.

Heavy rain and thunderstorm in many places of Chennai

மழைக் காரணமாக வளசராவாக்கம் உள்ளிட்ட பல இடங்களில் மின்சாரம் தடைபட்டுள்ளது. பல இடங்களில் கடுமையான போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது.

திடீர் மழை மற்றும் போக்குவரத்து நெரிசல் காரணமாக வேலைக்கு சென்றவர்கள் வீடு திரும்ப முடியாமல் அவதியடைந்துள்ளனர். இருப்பினும் கடுமையான வெப்பம் மற்றும் தண்ணீர் பஞ்சத்தால் தவித்தித்ருந்த மக்கள் இந்த மழையை கொண்டாடி வருகின்றனர்.

சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளிலும் மழை கொட்டித் தீர்த்துவருகிறது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி, கும்மிடிபூண்டி, பெரியபாளையம், ஊத்துக்கோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மழை பெய்தது. காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு, செவிலிமேடு, ஒரிக்கை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மழை பெய்தது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Heavy rain and thunderstorm in many places of Chennai. Chennai coimbedu, Ramapuram. valasarawakkam, Ambatore, AnnaNagar and outer of the Chennai also rains heavily.
Please Wait while comments are loading...