தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு இடியுடன் மிக கனமழை பெய்யும்.. இந்திய வானிலை மையம் எச்சரிக்கை
Recommended Video
டெல்லி: தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்து வரும் நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மற்றும் தென்மாவட்டங்களான ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் டெல்டா மாவட்டங்களான திருவாரூர், தஞ்சாவூர், காரைக்கால், கடலூர் பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதேபோல் தர்மபுரி, ஈரோடு,தேனி, கிருஷ்ணகிரிமாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

இந்திய வானிலை
இந்தியா வானிலை ஆய்வு மையம் இன்று காலை வெளியிட்டுள்ள அறிவிப்பில். தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் அக்டோபர் 20ம் தேதியான இன்று தெற்கு உள் கர்நாடகா, தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், மாஹி உள்ளிட்ட பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

3 நாளுக்கு மழை
இதேபோல் அக்டோபர் 21, அக்டோபர் 22 ஆகிய தேதிகளில் தெற்கு உள்கர்நாடகா, தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், ஆகிய பகுதிகளில் கனமழை முதல் மிககனமழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை
மகாராஷ்டிரா, கேரளா,கர்நாடகா ஆகிய மாநிலங்களில் அரபிக்கடல் பகுதியில் 45 முதல் 55 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம்.

தமிழகத்திற்கு எச்சரிக்கை
இதேபோல் அக்டோபர் 23, 24ம் தேதிகளில் தமிழ்நாடு, ஆந்திராவின் கடலோர பகுதிகள், தெலுங்கானா, ராயலசீமா, கேரளா, மாஹி மற்றும் கேரள கடலோர பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளது.
-
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
ரூ.140 சரக்கு பாட்டிலில் அரசுக்கு மட்டும் இவ்வளவு லாபமா? தலை சுற்ற வைக்கும் டாஸ்மாக் வரி கணக்கு -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications