சென்னையில் கனமழை.. கத்திப்பாரா மேம்பாலத்தில் கடும் போக்குவரத்து நெரிசல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் பல்வேறு இடங்களில் இன்று மாலை பெய்த கனமழையால் கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் அலுவலகம் முடிந்து வீடு திரும்பும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று மாலை திடீரென கனமழை பெய்ததது. கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், நுங்கம்பாக்கம், தாம்பரம், குரோம்பேட்டை, அஸ்தினாபுரம், வண்டலூர், பம்மல், பள்ளிக்கரனை, எழும்பூர் உள்ளிட்ட இடங்களில் இடியுடன் கனமழை கொட்டியது.

heavy traffic in In Guindy

இந்நிலையில் கனமழை காரணமாக கிண்டி பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கத்திப்பாரா மேம்பாலத்தில் வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு நெரிசல் ஏற்பாட்டுள்ளது.

கத்திப்பாரா மேம்பாலத்தில் இருந்து ஜிஎஸ்டி சாலை வரை பேருந்துகள், கார், பைக் உள்ளிட்ட வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன. இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மாலையில் அலுவலகம் முடிந்து வீடு திரும்புவோர் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
heavy traffic in In Guindy kaththipara, due to heavy rain
Please Wait while comments are loading...