For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அரசுக்கு எதிராக கமல் கவுன்ட்டர் கொடுக்க... டுவிட்டர் எழுத்துகளின் கவுன்ட்கள் அதிகரிப்பு

டுவிட்டரில் டைப் செய்யும் எழுத்துகளின் எண்ணிக்கை இரட்டிப்பாக்கப்பட்டதால் யாருக்கு வசதியாக இருக்கிறதோ இல்லையோ நடிகர் கமல்ஹாசனுக்கு மிகவும் வசதியாக இருக்கும்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: டுவிட்டரில் டைப் செய்யும் எழுத்துகளின் எண்ணிக்கையை அந்த நிறுவனம் அதிகரித்துள்ளது நடிகர் கமல்ஹாசன் தமிழக அரசுக்கு எதிராக முன்வைக்கும் கருத்துகளுக்கு அதிகரிக்க மிகவு்ம வசதியாக இருக்கும்.

நடிகர் கமல்ஹாசன் ஜல்லிக்கட்டு தொடங்கி நீட் தேர்வு, விவசாயிகள் பிரச்சினை, டெங்கு வரை டுவிட்டரில் தனது கருத்துகளை பதிவு செய்துள்ளார். பெரும்பாலும் தமிழக அரசின் மீதான விமர்சனங்களாக இருந்தாலும் அதை டுவிட்டரிலேயே பதிவிடுகிறார்.

அவர் பதிவு செய்யும் டுவிட்டர்கள் ஆட்சியாளர்களை உச்சகட்ட கோபம் அடைய வைத்துள்ளன.

 டுவிட்டரில் அரசியல்

டுவிட்டரில் அரசியல்

அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் நடிகர் கமல் டுவிட்டரிலேயே கருத்துகளை வெளியிடுவது குறித்து கருத்து கூறுகையில், நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரிலேயே இருந்து அரசியலுக்கு வர நினைப்பது தவறு, மக்களோடு மக்களாக பழக வேண்டும் என்ற கருத்துகளை முன்வைத்துள்ளனர். டுவிட்டரில் அரசியல் செய்கிறார் என்று சொல்லும் அளவுக்கு அவரது டுவீட்டுகள் இருந்தன.

 தொடர் டுவிட்டுகள்

தொடர் டுவிட்டுகள்

சில நேரங்களில் ஒரே டுவீட்டில் கவிதை வடிவில் சொல்ல வந்ததை சொல்லிவிடுவார். ஆனால் வாசகர்களுக்குத்தான் அதை புரிந்து கொள்வது சிரமமாக இருந்தது. ஆனால் தற்போது கவிதை வடிவில் இருந்து மக்கள் புரிந்து கொள்ளும் வடிவில் டுவீட்டுகளை கமல் அனுப்பி வருவதால் அவர் தொடர் டுவீட்டுகளை பயன்படுத்துகிறார். டுவிட்டரில் 140 எழுத்துகளுக்கு மேல் டைப் செய்ய முடியாது என்பதால் தொடர் டுவீட்டுகளை பயன்படுத்துவார்.

 டுவிட்டரின் எண்ணிக்கை

டுவிட்டரின் எண்ணிக்கை

தற்போது டுவிட்டரில் டைப் செய்யும் எழுத்துகளின் எண்ணிக்கை 140-லிருந்து 280-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் யாருக்கு நன்மையோ இல்லையோ கமல் ஆட்சியாளர்களுக்கு எதிராக இன்னும் அதிகமாக கருத்து கூற இயலும்.

 கமல் கருத்து

கமல் கருத்து

எழுத்துகளுக்கு தனி வலிமை உண்டு என்பதை போல் கமலின் டுவீட்டுகளுக்கும் வலிமை உள்ளது. இனி டுவிட்டரில் மிகவும் நீளமான கருத்துகளுடன் ஆட்சியாளர்களை நடிகர் கமல்ஹாசன் வெளுத்து வாங்குவார். இதனால் அமைச்சர்களுக்கு ரத்த அழுத்தம் உயர்வது நிச்சயம் என்றே பொதுமக்கள் கருதுகின்றனர்.

English summary
As Twitter 's chartacter limit doubled in size, hereafter Kamalhassan may give his counter more stronger and longer.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X