சட்ட உதவி மைய வழக்கறிஞர்கள் தூத்துக்குடிக்கு சென்று விசாரிக்க வேண்டும்.. ஹைகோர்ட் உத்தரவு
சட்ட உதவி மைய வழக்கறிஞர்கள் தூத்துக்குடிக்கு சென்று விசாரிக்க வேண்டும் என ஹைகோர்ட் கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
மதுரை: சட்ட உதவி மைய வழக்கறிஞர்கள் தூத்துக்குடிக்கு சென்று விசாரிக்க வேண்டும் என ஹைகோர்ட் கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
தூத்துக்குடியில் வன்முறை வெடித்ததை தொடர்ந்து
நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது. இணையதள சேவை 5 நாட்களுக்கு முடக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்தது.
இதற்கு எதிராகவும், சிபிஐ விசாரணை கோரியும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் 8 பேர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுக்களை இன்று விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, தூத்துக்குடி தவிர மற்ற இரண்டு மாவட்டங்களில் இணையதள சேவை நிறுத்தப்பட்டது ஏன் என கேள்வி எழுப்பியது.

நாளையே முடிவு
இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் இணையதள சேவை வழங்கப்பட்டது. இந்நிலையில் இன்று மாலை அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, தூத்துக்குடி மாவட்டத்தில் இணைய சேவை வழங்குவது குறித்து நாளையே முடிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.

தேவை என்ன - உத்தரவு?
சட்ட உதவி மைய வழக்கறிஞர்கள் தூத்துக்குடிக்கு சென்று விசாரிக்க வேண்டும் உத்தரவிட்டுள்ளது. அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் தேவை என்ன என்பதை கேட்டறிய வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

பரிந்துரைக்கலாம்
காயம் அடைந்தவர்களுக்கு தேவைப்பட்டால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது. அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் மதுரை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கலாம் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

என்ன நடவடிக்கை?
மேலும் தூத்துக்குடியில் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கிறதா என கேள்வி எழுப்பிய நீதிமன்றம், தூத்துக்குடியில் அமைதி திரும்பவும் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கவும் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் கேள்வி எழுப்பியது.

6 வாரத்துக்கு ஒத்திவைப்பு
மேலும் சட்ட உதவி மையம் எடுத்த நடவடிக்கைகளை ஜூன் 6 ஆம் தேதி அறிக்கையாக சமர்பிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதைத்தொடர்ந்து 6 வாரத்துக்கு வழக்கு விசாரணையை நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் சுரேஷ் குமார் அமர்வு ஒத்திவைத்தது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications