For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் மாவீரர் தின நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் மாவீரர் தின நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரபாகரன் பிறந்தநாளை முன்னிட்டு மாவீரர் தின நிகழ்ச்சி பல்வேறு நாடுகளில் நவம்பர் 27 ம் தேதி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்தாண்டு தமிழ்நாட்டில் நடத்த அனுமதி கோரி மதிமுக, நாம் தமிழர் கட்சி, திராவிடர் விடுதலை கட்சிகள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை மனு தாக்கல் செய்யப்பட்டது.

 high court permission to remembrance day

அந்த மனுவில், இலங்கையில் உள்நாட்டு போரில் உயிரிழந்த விடுதலைப்புலிகள் அமைப்பை சேர்ந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் மாவீரர் தின நிகழ்ச்சிகளுக்கு தமிழகத்தில் அனுமதி வழங்க காவல்துறைக்கு உத்தரவிடக்கோரி இருந்தது. இந்த வழக்குகளை தனித்தனியே விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுப்பையா, மாவீரர் தினத்தை தமிழகத்தில் கொண்டாட அனுமதி அளித்து உத்தரவிட்டார். இதையடுத்து பெரவள்ளூர் சதுக்கம், காமராஜர் சிலை பின்புறம், திரு.வி.க.நகர் பேருந்து நிலையம் அருகே இன்று கூட்டம் நடைபெருகிறது.

ஆனால் திராவிடர் விடுதலை கழகம் சார்பில் சேலத்தில் பெரியத்தான் புலியூருக்கு பதிலாக பழனிசாமி தோப்பில் மாவீரர் தினத்தை நடத்திக் கொள்ளலாம் என உத்தரவிட்டார்.

English summary
chennai high court permission given to remembrance day event
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X