ஏடிஎம்களை தேடித் தேடி அலைந்த அந்த நாட்கள்... அவ்வளவு எளிதாக மறக்க முடியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil
  பண மதிப்பிழப்பு..ராகுல் காந்தி வெளியிட்ட நெஞ்சை உருக்கும் போட்டோ!- வீடியோ

  திண்டுக்கல்: இந்தியர்களின் நிம்மதியை தொலைக்கச் செய்த நாள் நவம்பர் 8. ரூ500, ரூ1,000 நோட்டுகள் செல்லாது என்பது உள்ளிட்ட பிரதமர் மோடியின் அறிவிப்புகள் கோடிக்கணக்கான மக்களின் இயல்பு வாழ்க்கையை காவு கொண்டது.

  ரூபாய் நோட்டுகள் செல்லாது என்கிற அறிவிப்புடன் ஏடிஎம்களில் பணம் எடுக்கவும் கட்டுப்பாடு விதித்தது மத்திய அரசு; வங்கிகளில் பணம் எடுக்கவும் கட்டுப்பாடுகளை கொண்டு வந்தது மத்திய பாஜக அரசு.

  ஏடிஎம்களுக்காக அலைச்சல்

  ஏடிஎம்களுக்காக அலைச்சல்

  இதனால் நாள்தோறும் சொந்த வங்கி கணக்கில் இருக்கும் ரூபாய் நோட்டுகளை எடுப்பதற்காக ஏடிஎம்களை தேடித் தேடி அலைந்த அந்த நாட்களை இந்தியர்கள் அவ்வளவு எளிதாக கடந்து போய்விட முடியாது.. வீதிக்கு வீதி முளைத்திருந்த ஏடிஎம்கள் திடுதிப்பென மூடப்பட்டன.

  பல மணிநேர வரிசை

  பல மணிநேர வரிசை

  எங்கோ ஒரு மூலையில் இருக்கும் ஏடிஎம்களில் பல கிலோ மீட்டர் தொலைவுக்கான கியூ. அன்றாட செலவுக்கான சொற்ப பணத்தை கையில் எடுக்கவே நாள்தோறும் பல மணிநேரம் கியூவில் நிற்க வேண்டிய பேரவலம்.

  பெருங்கோபம் வந்த நாள்

  பெருங்கோபம் வந்த நாள்

  அதுவும் கியூவில் நின்றாலும் நமக்கு பணம் கிடைக்குமா? கிடைக்காதோ என்கிற பெரும் பதற்றம்.. இந்தியர்கள் ஒட்டுமொத்தமாக மத்திய பாஜக அரசு மீது பெருங்கோபம் கொண்ட நாட்கள் அவை..

  இன்றும் ஏடிஎம்கள் மூடல்

  இன்றும் ஏடிஎம்கள் மூடல்

  அப்போது மூடப்பட்ட ஏடிஎம்கள் இன்றளவும் மூடியே கிடக்கின்றன. சாமானியர்களை சகட்டுமேனிக்கு வதைக்க வைத்த மிகவும் துயரமான கருப்பு தினம் நவம்பர் 8.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  After Prime Minister Narendra Modi's demonetise announcement on Nov.8, 2016, Thousands of people lined up outside banks and ATMs across India.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற