For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜியோ ஃபோன் புக்கிங் இன்று தொடங்குது... அதுக்கும் ஆதாரை கொண்டு போகனும் மக்களே!

ஜியோ ஃபோன் புக்கிங் இன்று தொடங்குகிறது, வாடிக்கையாளர்கள் இதனை எப்படி புக் செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

சென்னை : ஜியோ ஃபோன் புக்கிங் இன்று தொடங்க உள்ள நிலையில் ஜியோ ஃபோன் புக்கிங்கிற்கும் ஆதார் கார்டை கொண்டு செல்ல வேண்டும், எப்படி புக்கிங் செய்யலாம் என்பதை இப்போது பார்க்கலாம்.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ சேவையைத் தொடர்ந்து அறிவிக்கப்பட்ட ஜியோ ஃபோன் புக்கிங் இன்று தொடங்குகிறது. கடந்த ஜூலை 21ம் தேதி ரிலையன்ஸ் நிறுவனத்தின் 40வது ஆண்டு கூட்டத்தில் ஜியோ ஃபோன் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆகஸ்ட் 24 முதல் இதற்கான முன்பதிவு தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.

4 ஜி வசதிகொண்ட இந்த ஜியோ ஃபோன் முகப்பு கேமரா, ஜிபிஎஸ் வசதி என ஸ்மார்ட் போனில் இருக்கும் அத்தனை வசதிகளும் இருக்கும். 22 இந்திய மொழிகள் உட்பட மைக்ரோ எஸ்டி மற்றும் குரல் வழி உத்தரவுக்கு கீழ் படியும் வகையில் இருக்கும். இந்த மொபைலில் நீங்கள் குரல் வழியாக கேட்கும் கேள்விகளுக்கும் பதில் வழங்கும், அதாவது அலெக்ஸா , சிரி, பிக்ஸ்பீ, கூகுள் அசிஸ்ட் போன்ற செயல்பாட்டை பெற்றிருக்கும்.

இன்று முதல் புக்கிங்

இன்று முதல் புக்கிங்

ஜியோபோன் விலை ஜீரோ மட்டுமே, ஆனால் ரூ. 1500 திரும்ப பெறதக்க வகையிலான வைப்புத் தொகையாக செலுத்தப்பட வேண்டும். இந்த வைப்புத் தொகை மூன்று வருடங்களுக்கு பிறகு அதாவது 36 மாதங்களுக்கு திரும்ப பெறலாம் என்றும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. இந்நிலையில் ஜியோ ஃபோன் புக்கிங் இன்று முதல் தொடங்குகிறது. இந்த ஃபோனை புக் செய்ய வாடிக்கையாளர்கள் கட்டாயம் தங்களது ஆதார் கார்டை வைத்திருக்க வேண்டும்.

ஆன்லைன் பதிவு

ஆன்லைன் பதிவு

ஜியோ ஃபோனை ஆன்லைனில் புக் செய்ய நினைப்பவர்கள் ஜியோ.காம் என்ற இணையதளத்தில் ஜியோ ஃபோனை புக் செய்ய விருப்பம் தெரிவிக்கலாம். இதன் மூலம் உங்களுக்கு குறுஞ்செய்தியோ அல்லது ஈமெயிலோ மூலமோ புக்கிங் தொடங்கியதும் தகவல் தெரிவிக்கப்படும். இதே போன்று ஜியோ ஆப்கள் மூலமும் தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம்.

ஆஃப்லைன் பதிவு எப்படி?

ஆஃப்லைன் பதிவு எப்படி?

ஆஃப்லைன் புக் செய்ய விரும்புவோர் அருகிலுள்ள ஜியோ ரீட்டெய் கடைகளை அணுகலாம். இதே போன்று எஸ்எம்எஸ் மூலமும் இது குறித்த தகவலைப் பெறலாம். அதற்கு JP <உங்கள் பகுதியின் பின் கோடை> டைப் செய்து 7021170211 என்ற எண்ணிற்கு அனுப்பலாம். ஆனால் ஆஃப்லைன் புக்கிங்களிற் செல்லும் போது ஆதார் அட்டையை கட்டாயம் எடுத்துச் செல்ல வேண்டும்.

எப்போது கிடைக்கும்?

எப்போது கிடைக்கும்?

முதலில் வருவோருக்கே முன்னுரிமை என்று ஜியோ நிறுவனம் கூறியுள்ள நிலையில் இந்த ஃபோன் எப்போது வாடிக்கையாளர்களின் கைக்கு கிடைக்கும் என்பதில் அதிகாரப்பூர்வ தகவல் இல்லை. ஆனால் ஜியோ ஃபோன் அறிவிப்பு நிகழ்ச்சியின் போது செப்டம்பர் முதல் வாரத்தில் ஜியோ ஃபோன் கிடைக்கும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
For those who wish to pre-book the phone online, they can go to Jio.com and register interest for the JioPhone and Offline buyers need to walk up to the nearby Jio store or any retail shop that is taking JioPhone registrations.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X