For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு...குறைகேட்பு கூட்டத்தை புறக்கணித்து கோஷமிட்ட புதுகை விவசாயிகள்

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தை புறக்கணித்து, விட்டு விவசாயிகள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

புதுக்கோட்டை: ஹைட்ரோ கார்பன் திட்ட ஒப்பந்தத்தில் மத்திய அரசு கையெழுத்திட்டதை கண்டித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தை விவசாயிகள் புறக்கணித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எரிவாயுவை எடுக்க மத்திய அரசு கடந்த மாதம் தனியார் நிறுவனத்துக்கு அனுமதி அளித்தது. அந்த திட்டத்தை செயல்படுத்தினால் தமிழகத்தில் விவசாயம் கேள்விக்குறியாகி, தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று அப்பகுதி மக்கள் போராடினர்.

Hydrocarbon pact signed: Opposes Pudukkottai farmers

விவசாயத்தை பாதிக்கும் எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்த அனுமதி்க்க முடியாது என்று தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் உறுதி அளித்ததன் பேரில் போராட்டத்தை மக்கள் ஒத்திவைத்தனர்.

இந்நிலையில் நாடு முழுவதும் 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எரிவாயுவை எடுக்கும் திட்டத்தில் மத்திய அரசு நேற்று கையெழுத்திட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த நெடுவாசல் மக்கள் நாளை முதல் தங்கள் போராட்டத்தை தொடங்குவதாக அறிவித்துள்ளனர்.

இதனிடையே, இன்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் நடைபெற்றது. அப்போது அந்த கூட்டத்தை விவசாயிகள் புறக்கணித்து மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. குறைத்தீர் கூட்டம்

English summary
Central govt had signed hydrocarbon pact with 22 companies. Opposing this farmers of Pudukkottai District ignored farmers meeting at collectorate office.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X