என்னை ஏன், எம்.ஜி.ஆர். ஜெ. போல படைச்ச ஆண்டவா.. செல்லூர் ராஜு "வேதனை"!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மதுரை: அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வர சசிகலாவே காரணமென மனசாட்சிப்படி தனது சொந்த கருத்தை தெரிவித்ததாக, மீண்டும் அமைச்சர் செல்லூர் ராஜூ மீண்டும் கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

எம்ஜிஆர், ஜெயலலிதாவிற்கு வந்த சோதனைகள் போல தனக்கும் சோதனைகள் வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

I am facing lot of issues like MGR and Jayalalitha faced, says Sellur Raju

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் தனியார் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நேற்று பங்கேற்ற அவர், அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வர யார் காரணம் என கேட்டார்கள். அதற்கு என் மனசாட்சிப்படி, எனது தனிப்பட்ட கருத்தாக சசிகலாதான் காரணம் என தெரிவித்தேன்.

இது ஊடகங்களில் வேறுவிதமாக வெளிவந்து விட்டது. ஜெயலலிதாவுக்கும், எம்ஜிஆருக்கும் இதுபோன்ற நிறைய சோதனைகள் வந்து விட்டன. அதுபோல எனக்கும் வந்துள்ளது, என்றார். செல்லூர் ராஜூவின் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையில் கடந்த 8ஆம் தேதி பேசிய செல்லூர் ராஜூ, ஜெயலலிதா தலைமையில் ஆட்சி அமைவதற்கு சசிகலா மிக சிறப்பாக பணியாற்றி பாடுபட்டார். அதிமுக ஆட்சி மீண்டும் அமைய அவர் தான் காரணம். அந்த கருத்தை மாற்றிக்கொள்ளவோ, மறுப்பதற்கோ இல்லை. அவர் அமைத்து கொடுத்த அரசு சிறப்பாக செயல்படுகிறது என்று கூறினார்.

உடனே சி.ஆர். சரஸ்வதி, ஸ்லீப்பர் செல்கள் ஒவ்வொருவராக வெளியே வருகிறார்கள் என்று கூறினார். உடனே பதறிய
அமைச்சர் செல்லூர் ராஜூ, மனசாட்சிப்படி என் கருத்தை தெரிவித்தேன். நான் ஸ்லீப்பர் செல் இல்லை. எடப்பாடி அரசுக்கு துணையாக இருப்பேன் என கண் கலங்கினார். இந்நிலையில், மீண்டும் சசிகலாவிற்கு ஆதரவாக கருத்து கூறியுள்ளார் செல்லூர் ராஜூ.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Ministere Sellur Raju has said that he is facing so many issues like MGR and Jayalalitha face earlier.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற