For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அட நான் சசிகலாவை ஆதரிக்கலை.. எனக்கு சட்டம்தான் முக்கியம்.. சொல்வது சாமி!

சசிகலாவை நான் ஆதரிக்கவில்லை என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

By Karthikeyan
Google Oneindia Tamil News

டெல்லி: அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை நான் ஆதரிக்கவில்லை என்றும் அரசியலமைப்பு சட்டத்தை பின்பற்றி, அதன் அடிப்படையிலேயே கருத்து தெரிவித்து வருகிறேன் என்றும் பாஜக மூத்த தலைவரும் எம்.பியுமான சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுக விவகாரங்களில் அதிகம் தலையிடுவார் என எதிர்பார்க்கப்பட்டவர் சுப்பிரமணியன் சுவாமி. அதுவும் மன்னார்குடி கோஷ்டி, அதிமுகவை கைப்பற்றியது தொடர்பாக கடும் எதிர்ப்பை தெரிவிப்பார் சுப்பிரமணியன் சுவாமி என கூறப்பட்டது.

I am following the constitution,says Subramanian Swamy

அதேபோலத்தான் சசிகலாவுக்கு எதிராக சில கருத்துகளை கூறி வந்தார் சுப்பிரமணியன் சுவாமி. ஆனால் திடீரென சசிகலா முதல்வராவார்; ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக அரசை கலைக்க வேண்டும் என்றெல்லாம் டிவிட்டரில் போட்டு பரபரப்பை கிளப்பினார் சுப்பிரமணியன் சுவாமி.

இந்நிலையில் சசிகலாவை முதல்வராக பத‌விப் பிரமாணம் செய்து வைக்காம‌ல் தமிழக பொறுப்பு ‌ஆளுநர் வித்யாசாகர் ராவ் அர‌சியல் சாசனத்தை‌ மீறுவதாக சுப்பிர‌மணியன் சுவாமி குற்றம்சாட்டினார். மேலும் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை நேரில் சந்தித்து தமிழக அரசியல் நிலவரும் குறித்து ஆலோசனை நடத்தினார் சுப்பிரமணியன் சுவாமி.

இந்நிலையில் இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள சுப்பிரமணியன் சுவாமி, சில ஊடகங்கள் அரசியல் செய்வதற்காக நான் சசிகலாவிற்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறி வருகின்றனர். நான் அரசியலமைப்பை பின்பற்றுகிறேன். அதன் அடிப்படையிலேயே கருத்து கூறினேன். சசிகலாவை ஆதரிப்பதாக நான் கூறியதே இல்லை" என்று சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

English summary
I am following the constitution,says bjp senior leader Subramanian Swamy
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X