For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நான் சிங்கம்லே!... தமிழிசைக்கு குஷ்பு கொடுத்த பஞ்ச்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: தமிழ் நாட்டுக்கு மட்டுமல்ல என்னை இந்த உலகத்துக்கே தெரியும்; ஆனால் தமிழிசை சவுந்தரராஜனை தபால்காரருக்கே இப்போதுதான் தெரியும் என்று நடிகை குஷ்பு கூறியுள்ளார். நான் காக்கை அல்ல பெண் சிங்கம் என்றும் குஷ்பு கூறியுள்ளார்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் 130வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் பூந்தமல்லியில் நடந்தது. இதில் நடிகை குஷ்பு கலந்து கொண்டார். மஞ்சள் நிற புடவையில் தங்கத்தாமரை மகளாக பங்கேற்ற குஷ்பு... ஆக்ரோசமாகவும், அனலை கக்கும் வகையிலும் மத்தியில் ஆளும் பாஜக, தமிழகத்தை ஆளும் அதிமுகவை தாக்கி பேசியதுதான் நிகழ்ச்சியின் ஹைலைட். அவரது பேச்சை மேற்கொண்டு படியுங்களேன்.

I am a lionness, roars Kushboo

மக்களை கவனியுங்க

தமிழ்நாட்டில் பால்விலை, மின்சாரக்கட்டணம் பல மடங்கு உயர்ந்து விட்டது. இன்றைய முதல்வர் மக்கள் முதல்வரைப் பற்றி சிந்திப்பதில் 10 சதவீதமாவது தமிழக மக்களை பற்றி சிந்திக்க வேண்டும்.

மத்திய அரசு மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதில் கவனம் செலுத்தவில்லை. பாஜக தலைவர்கள் நாட்டின் மத, இன ஒற்றுமைக்கு எதிரான கருத்துக்களைத்தான் கூறி வருகிறார்கள்.

மன்னிப்பு கேட்கும் அமைச்சர்கள்

பகவத்கீதையை தேசிய நூலாக்க வேண்டும், சமஸ்கிருதத்தை படிக்க வேண்டும், மற்ற மதத்தினர் பண்டிகைகளை கொண்டாடாமல் தடுக்க வேண்டும் என்பதில்தான் அக்கறை காட்டுகிறார்கள். இதுபோன்ற பிரச்சனைகளை எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் எழுப்பினால் ஆளும் பாஜக அமைச்சர்கள் மன்னிப்பு கேட்கிறார்கள். நாடாளுமன்றம் பாவ மன்னிப்பு கேட்கும் இடமாகி விட்டது.

கோட்சேவுக்கு சிலை

தேச தந்தை மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சேவுக்கு சிலை வைக்க வேண்டும் என்று பாஜக ஆதரவு அமைப்பு முடிவு செய்துள்ளது.

ஆளும் பாஜக அதை எதிர்க்கவில்லை. பிரதமர் மோடி இப்போது இந்தியாவில் இருப்பதே இல்லை. அவர் நமது நாட்டில் தங்கியிருந்து இங்கு உள்ள மக்கள் குறித்தும், நாட்டின் நலன் குறித்தும் சிந்திக்க வேண்டும்.

என் பின்னால் வரவில்லை

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் என்னை பற்றி மிகவும் மோசமாக விமர்சனம் செய்து இருக்கிறார். காமராஜர் கட்சி நடிகை குஷ்பு பின்னால் போகிறது என்று கூறியுள்ளார். யாரும் என் பின்னால் வரவில்லை. நான்தான் பெருந்தலைவர் காமராஜரின் கட்சிக்கு சென்று இருக்கிறேன்.

நடிகர்கள் மோசமானவர்களா?

நடிகை-நடிகர் என்றால் மோசமானவர்கள் என்பதுபோல் விமர்சிக்கிறார்கள். பா.ஜ.க. ஆளும் மத்திய அரசில் கேபினட் அமைச்சராக இருக்கும் ஸ்மிருதி இரானி ஒரு நடிகை இல்லையா? நரேந்திர மோடி தமிழ்நாட்டுக்கு வந்தபோது நடிகர் ரஜினியை சென்று சந்திக்கவில்லையா?. அவரை பா.ஜ.க.வுக்கு இழுக்க முயற்சி செய்யவில்லையா?

பாஜகவிலும் நடிகைகள்

அதேபோல், அந்த கட்சியின் தலைவர் அமித்ஷா சென்னைக்கு வந்தபோது, நடிகர் நெப்போலியன், இசையமைப்பாளர் கங்கை அமரன், நடிகை காயத்ரி ரகுமான் உள்ளிட்ட சினிமாத்துறையை சேர்ந்தவர்களை பா.ஜ.க.வில் சேர்க்கவில்லையா? நடிகர், நடிகைகளை கட்சியில் வைத்திருக்கும் இவர்கள் என்னை விமர்சிப்பதா?

உலகத்துக்கே தெரியும்

நடிகையாக இருப்பவர் ஒரு கட்சியின் தொண்டராக இருந்து பணியாற்றுவதில் என்ன தவறு இருக்கிறது? யாருக்கும் என்னைத் தெரியாது என்று தமிழக பா.ஜ.க. தலைவர் சொல்லி இருக்கிறார். என்னை தமிழகத்திற்கு மட்டுமல்ல, இந்த நாட்டுக்கு மட்டுமல்ல, உலகத்துக்கே என்னை தெரியும்.

பெண் சிங்கம்

ஆனால், தமிழக பா.ஜ.க. புதிய தலைவர் ஆனது தபால்காரருக்கே இப்போதுதான் தெரியும். பாம்பு என்றால் சண்டை போடலாம். பல்லி என்றால் தள்ளிவிட்டு போகலாம். நான் அப்படி அல்ல. ஒரு பெண்ணுக்கு மற்றொரு பெண் எதிரியா? உண்மையாகவே, அவர் என்னைப் பார்த்து பயந்து விட்டார். நான் காக்கை அல்ல. பெண் சிங்கம்'' என்று பஞ்ச் அடித்தார். குஷ்பு.

2016ல் காங்கிரஸ் ஆட்சி

நான் தமிழக காங்கிரஸ் கட்சியை வளர்க்க முழு மூச்சுடன் பாடுபடுவேன். 2016-ல் நிச்சயமாக தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும். "கை தான் நமக்கு நம்பிக்கை." என்றும் போகிற போக்கில் சொன்னார் குஷ்பு.

அம்மாவுக்கு மரியாதை

இந்த கூட்ட மேடைக்கு தனது தாயாரை அழைத்த நடிகை குஷ்பு, தாம் திமுகவில் இருந்தபோது அதனை தமது தாயார் விரும்பவில்லை என்றும், ஆனால் இந்திரா காந்தி போன்ற தலைவர்கள் அங்கம் வகித்த காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தது குறித்து தமது தாயார் மகிழ்ச்சி அடைந்ததாகவும், தாம் கலந்துகொள்ளும் காங்கிரஸ் கூட்டத்தை நேரில் பார்க்க வேண்டும் என விரும்பியதால் அவரை அழைத்து வந்ததாகவும் கூறினார். இதை டிவியில் பார்த்த திமுகவினரையும், அந்த கட்சித்தலைவர்களின் ரியாக்சனையும் கேட்டால்தானே தெரியும்?.

English summary
Actress Kushboo has said that she is not a crow, but lioness in a Congress meeting.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X