என்னாலும் முதல்வரை பார்க்க முடியலையே.... பொன். ராதாகிருஷ்ணன்
நாகர்கோவில்: முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க முடியவில்லை என்று மத்திய மின்துறை அமைச்சர் பியுஷ் கோயல் சொன்னது சரிதான், தமிழகத்தின் வளர்ச்சிக்காக நானும் பலமுறை ஜெயலலிதாவை சந்தித்து பேச முயன்றும் அனுமதி கிடைக்கவில்லை என்று அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
டெல்லியில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் பேசிய மத்திய மின்துறை அமைச்சர் பியுஷ் கோயல், ‘நான் 28 மாநில முதல்வர்கள், அமைச்சர்களை எளிதில் அணுகி, பேச முடிந்தது; ஆனால், தமிழக முதல்வர் ஜெயலலிதாவை இதுவரை ஒரு முறை கூட சந்தித்து பேச முடியவில்லை' என்று கூறியிருந்தார்.

மத்திய அமைச்சரின் கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபோல் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனும் முதல்வரை பார்க்க முடியவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.
நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன் ராதா கிருஷ்ணன். மத்திய மின் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தமிழகத்து பல காரியம் செய்ய வேண்டும் என்ற எண்ணயும் அதை தமிழக அரசு ஏற்று கொள்ளவில்லை என்று பட்டவர்த்தனமாக தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வரை தமிழக வளர்ச்சி குறித்து நானும் பல முறை சந்திக்க முயன்றேன். முடியவில்லை. தமிழக மீனவர்களின் பிரச்சனையை தீர்க்க தமிழக அரசு கவனம் செலுத்தவில்லை என்பதுதான் எங்களின் கவலை. நாங்கள் மூன்று முறை மீனவர்களை அழைத்து வெளியுறவு துறை அமைச்சரிடம் பேச வைத்தோம். தமிழக அரசு இதில் கவனம் செலுத்த வேண்டும்.
ஓரு விசயத்தை குமரி, தமிழக மக்களுக்கு சொல்றேன். மீனவர்கள் பல ஆண்டுகளுக்கும் மேலாக ஏங்கி கொண்டிருக்கும் விசயம் தான் குளச்சல் துறைமுகம். குளச்சல் துறைமுகம் வேண்டாம் என்பவர்கள் மிகப்பெரிய துரோகத்தை செய்கின்றனர். அவர்கள் தமிழின துரோகிகள் என்ற பட்டத்தை பெறுவார்கள் என்று காட்டத்துடன் தெரிவித்தார்.
கூட்டணி அமைப்பின் பெயரையே தெரியாத ஒரு கூட்டணி, இன்றும் கூட்டணியில் உள்ள கட்சியை சேர்ந்தவர்கள் அவர்கள் ஆரம்பத்தில் வைத்திருந்த பெயரை ஏற்றுக்கொள்கிறார்களா, பத்திரிகையாளர்களை சந்தித்தபோது திடீரென்று அறிவித்த பெயரை பயன்படுத்தப்போகிறார்களா என்று அதன் ஸ்திரத்தன்மையை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
வைகோ வழி நடத்தும் அந்த கூட்டணி தமிழகத்தில் கடைசி நிலையை எட்டும் வாய்ப்புத்தான் உள்ளது. மக்கள் நல கூட்டணியே அது இல்லை. அதனை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. வேறு ஒரு பெயரை கூறுகின்றனர்.
நாங்கள் எந்த கட்சிக்கும் வலை போடவில்லை. கூட்டணியில் எங்களோடு வருகின்றவர்களை ஏற்றுக்கொள்கிறோம். பேரம் பேச வேண்டிய நிலையில் பாஜகவிற்கு இல்லை பாமக உட்பட யாருடனும் பேச வேண்டிய அவசியம் எங்களிடம் இல்லை. எங்களிடம் வந்து யார் வேண்டுமானாலும் பேசட்டும்.
தமிழக தேர்தல் பிரசாரத்திற்கு பிரதமர் மோடி, அகில இந்திய தலைவர் அமித்ஷா உள்ளிட்டோர் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications