இளையராஜா நோட்டீஸ் விவகாரம்.. பிரச்சினையை பெரிதாக்க வேண்டாம்.. எஸ்பிபி வேண்டுகோள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இளையராஜா வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பிய விவகாரத்தை பரபரப்பு செய்தியாக்க வேண்டாம் என எஸ்.பி. பாலசுப்பிரமணியன். தனது ஃபேஸ்புக் வாயிலாக கோரிக்கை விடுத்துள்ளார்.

பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு தன்னுடைய பாடல்களை அனுமதியின்றி பாடியதற்காக வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் இசையமைப்பாளர் இளையராஜா. இந்நிகழ்வு தமிழ் திரையுலகினர் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

I.Raja- SPB issue sensational, says SPB

சமூகவலைத்தளத்தில் பலரும் இளையராஜாவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் இதுகுறித்து எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பது, "எனது நண்பர்கள், இசைப் பிரியர்கள் குறிப்பாக அனைத்து பத்திரிகையாளர்களுக்கும், இளையராஜா - எஸ்.பி.பி. விவகாரத்தை பரபரப்பாக்க வேண்டாம் என்று கோரிக்கை வைக்கிறேன்.

நடந்த விஷயம் துரதிர்ஷ்டவசமானது. வாழ்க்கையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் செல்ல வேண்டும். இப்போது இங்கு இசை நிகழ்ச்சிகளையும் நடத்த வேண்டும். கடவுளின் படைப்பில் அனைவரும் சமம். நன்றி" என்று தெரிவித்துள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
I request all friends Don't make I.Raja- SPB issue sensational, says SPB
Please Wait while comments are loading...