என் பேச்சை கேட்டிருந்தால்.. தினகரனின் நிலைமையே வேறு.. உண்மையை உடைத்த கடம்பூர் ராஜு!
கோவில்பட்டி: என்னுடைய வேண்டுகோளை அப்போதே ஏற்றிருந்தால் டிடிவி தினகரனுடைய நிலைமையே வேறு - சசிகலா மனசாட்சிப்படி நடந்து கொண்டுள்ளார் - என அமைச்சர் கடம்பூர் ராஜு கோவில்பட்டி அருகே செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தமிழகத்தில் அரசியல் தேர்தல் களம் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கோவில்பட்டி அருகே கயத்தார் ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு பகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்..
அதன்பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசுகையில், டிடிவி தினகரனை கோவில்பட்டி தொகுதியில் முன்பு நிற்க சொல்லி வேண்டுகோள் வைத்தேன் அதேபோல் தினகரனுக்கு பல வேண்டுகோளை அப்போது வைத்துள்ளேன்

தினகரன் கேட்டிருந்தால்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறப்புக்கு பின் 18 எம்எல்ஏக்கள் கூட்டிக் கொண்டு கவர்னரை பார்க்க சென்ற போது அப்போது நாங்கள் இது சரியான அணுகுமுறை இல்லை என கூறினோம் 18 எம்எல்ஏக்கள் வாழ்க்கை முடிந்துவிடும் அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று அப்போது தளவாய்சுந்தரம் உட்பட நான் வேண்டுகோளை வைத்தோம் இந்த வேண்டுகோளை அவர் ஏற்றிருந்தால், இப்போது அந்த 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் பெற்றிருக்க மாட்டார்கள் ஆட்சிக்கு பல சிக்கல்கள் இடையூர் களங்கம் விளைவித்த அவப்பெயர் தினகரனுக்கு வந்திருக்காது. என்னுடைய வேண்டுகோளை தினகரன் ஏற்றிருந்தால் தினகரனுடைய நிலையே வேறு இந்த நிலைக்கு அவர் தள்ளப்பட்டிருக்கும் நிலைக்கு வந்திருக்கிறது

காலம் கடந்துவிடவில்லை
உடன் இருந்தவர்களின் தவறான வேண்டுகோளை ஏற்காமல் இருந்திருந்தால் அவருக்கு எப்போதும் நல்லது நடந்திருக்கும் தேர்தல் முடிந்த பின்பு அவருக்கு ஒரு வேண்டுகோளை வைப்போம். திரும்பவும் கேட்கும் காலம் கடந்திடவில்லை எங்களது வேண்டுகோள். எப்பவுமே நல்லது நடக்க வேண்டிய வேண்டுகோள்

பயப்படமாட்டேன்
தினகரன் மட்டுமல்ல முக ஸ்டாலின் வேண்டுமானாலும் கோவில்பட்டி தொகுதியில் போட்டிபோடட்டும் தொகுதி மக்கள் மீது நான் வைத்திருக்கும் நம்பிக்கை தொகுதி மக்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கை நான் ஆற்றிய பணிகள் எனக்கு சாதனைகள் வெற்றியை தரும் இதில் நான் யாரைப் பார்த்து பயப்பட வேண்டும் தான் முடிவு செய்யப் போகிறார்கள்

இரட்டை இலைக்கு ஆதரவு
சசிகலா தற்போது பல்வேறு கோவிலில் தரிசனம் செய்து வருவது குறித்து கேட்கிறீர்கள், சசிகலா பாவம், 4 ஆண்டுகள் சிறை தண்டனையில் இருந்து வந்து மன அமைதிக்காக தற்போது கோயில் கோவிலாக போய் வருகின்றார். அவர் ஏற்கனவே அறிக்கை வெளியிட்டுள்ளார் அதில் இரட்டை இலைக்கு வாக்கு அளிக்க வேண்டும் என்றும் அதிமுக ஆட்சி தொடர வேண்டும் என்று சொன்னால் இந்த வெற்றிச் சின்னமான இரட்டை இலைக்கு தான் வாக்கு அளிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை தான் சசிகலா கூறிவிட்டார்.

திமுக வரக்கூடாது என்றார்
கோவிலுக்கு சென்று வரும் அவர் ஏதாவது இடத்தில் இந்த சின்னத்துக்கு தான் வாக்களியுங்கள் என கூறி உள்ளாரா, தெளிவாக கூறிவிட்டார் அம்மாவின்
ஆட்சிக்கு துரோகம் செய்யவில்லை துரோகம் செய்ய விரும்பவில்லை அம்மாவின் ஆத்மாவுக்கு துரோகம் செய்ய விரும்பவில்லை, அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் எனவும் திமுக வரக்கூடாது என்றுதான் அறிக்கை வெளியிட்டார்.

மனசாட்சி படி அறிக்கை
இரட்டை இலைக்கு ஓட்டு போடக்கூடாது அம்மாவின் ஆட்சி தொடர கூடாது என ஒரு காலத்திலும் சசிகலா சொல்லவே இல்லை அவர் செல்லும் இடங்களுக்கு
சென்று சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அதை வாக்கு வங்கியாக மாற்றலாம் என கோவிலுக்கு செல்லும் இடத்தில் கூட்டத்தை திரட்டுகின்றனர். சசிகலா மனசாட்சிப்படி அறிக்கை வெளியிட்டுள்ளார் அவர் இரட்டை இலைக்கு ஓட்டு போட சொன்னார் என்பது தான் எங்களுடைய கருத்து" இவ்வாறு கடம்பூர் ராஜு பேசினார்.