சென்னையில் பரவலாக மழை... மாலைப் பொழுதை ஜில்லாக்கியது காற்று!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : சென்னையில் பல்வேறு இடங்களில் சாரல் மழை பெய்ததால் அலுவலகம் முடிந்து வீடு செல்வோர் சிறிது நேரம் காத்திருக்க நேரிட்டது. புறநகர்ப் பகுதிகளில் ஜில்லென்ற சாரல் காற்று இதமான சூழலை தந்துள்ளது .

வடகிழக்குப் பருவமழை தொடங்கியதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியது. தொடக்க நாளிலேயே நல்ல பூமி பூஜை போட்டது மழை. சென்னை முழுவதும் பரவலாக விட்டு விட்டு நல்ல மழை பெய்தது. தொடக்கமே அமர்க்கலமாக இருக்கிறதே என்று மக்கள் எண்ணினர்.

In several areas of Chennai drizzles

இந்நிலையில் இன்று மழை ஒரு காட்டு காட்டுமோ என்று எதிர்பார்த்த மக்களுக்கு லேசான சாரல் மழையே பெய்தது. சென்னையில் காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் அவ்வபோது சூரியன் தலைகாட்டிச் சென்றது. மாலையில் அலுவலகம் முடிந்து வீடு செல்லத் தயாரானவர்களுக்கு மட்டும் சிறிது நேரம் இடர்பாடு ஏற்பட்டது.

சென்னையில் போயஸ் கார்டன், தேனாம்பேட்டை உள்ளிட்ட இடங்களில் லேசான மழை பெய்தது. அதே போன்று திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் மழை தலையை காட்டிவிட்டு சென்றுள்ளது. சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் மழை வருவதற்கான அறிகுறியாக ஜில்லென்று காற்று வீசி வருகிறது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அரை மணி நேரமாக கனமழை பெய்து வருகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Due to NE monsoon in several parts of Chennai rain showers whereas Thiruvallur district's Ponneri and the surrounding area registered heavy rainfall.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற