திருப்பூர் சாயப்பட்டறைகள் தில்லுமுல்லு... சீல் வைத்த அதிகாரிகள்: வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

 திருப்பூர்: மழை நீரோடு சேர்ந்து கழிவு நீரையும் கலந்துவிட்ட சாயப்படறைகளுக்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சீல் வைத்து மூடினர்.

திருப்பூரில் பல்வேறு சாயப்பட்டறைகள் இயங்கி வருகின்றன. இந்த சாயப்பட்டறைகளில் இருந்து வரும் கழிவு நீர் நொய்யல் ஆற்றை முற்றிலும் மாசுபடுத்தியதால் அங்கு விவசாயம் அழிந்துகொண்டிருக்கும் அவலநிலை ஏற்பட்டுளளது.

In Thiruppur 22 dyeing unit sealed

இந்நிலையில், திருப்பூரில் கடந்த வாரம் பெய்த கனமழையின் போது வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. அப்போது 22 சாயப்பட்டறைகள் தங்கள் பட்டறைக் கழிவுகளை நொய்யல் ஆற்றில் கலந்துவிட்டன.

இது குறித்து மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு புகார் அளிக்கப்பட்டது. அதையடுத்து அங்கு வந்த அதிகாரிகள் விதிமுறைகளை மீறி கழிவுகளை ஆற்றில் விட்டது குறித்து ஆய்வு செய்து, 22 சாயப்பட்டறைகளுக்கு சீல் வைத்து மூடினர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
In Thiruppur 22 dyeing unit sealed as they poured polluted water in Noyyal River.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற