For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரஜினி என்ட்ரியால் அதிமுக வாக்கு வங்கிக்கு வேட்டு... சர்வே வீசிய அணுகுண்டு!

By Gajalakshmi
Google Oneindia Tamil News

Recommended Video

    திமுக ஆட்சி அமைக்கும்... பாஜக காலூன்றவே முடியாது - இந்தியா டுடே சர்வே

    டெல்லி : ரஜினிகாந்தின் அரசியல் என்ட்ரியால் அதிமுகவின் வாக்கு வங்கி சரிந்துள்ளதாக இந்தியா டுடே சர்வே முடிவுகள் சொல்கின்றன. அதிமுக மீது அதிருப்தியில் இருக்கும் சுமார் 60 சதவீதம் மக்களின் வாக்குகள் ரஜினியின் பக்கம் தான் திரும்புவதாக சர்வே முடிவுகள் தெரிவிக்கின்றன.

    தமிழகத்தின் தற்போதைய அரசயில் சூழலில் தேர்தல் நடந்தால் மக்களின் எண்ண ஓட்டம் என்ன என்று இந்தியா டுடே கார்வி இணைந்து ஒபினியன் போல் நடத்தியுள்ளது. இந்த போல் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.

    இதில் அதிமுக, திமுகவின் செல்வாக்கு, ரஜினியின் அரசியல் வருகையால் ஏற்பட்டுள்ள வாக்கு வங்கி பிரப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து மக்களிடம் கேள்வி கேட்டு அதன் அடிப்படையில் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. பொருளாதார பாதிப்பு, சமூக பிரச்னைகளில் அரசின் அக்கறை, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கியதா அரசு உள்ளிட்ட பல முக்கிய பிரச்னைகளை முன் வைத்து பள்ளி, கல்லூரிகள், தொழில் நிறுவனங்கள் மற்றும் விவசாயிகள் மத்தியில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.

    இதில் அதிமுக சிதைந்துள்ளதா என்று மக்களிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அதற்கு ஆம் என்று 54 சதவீதம் மக்களும், இல்லை என்று 35 சதவீத மக்களும் கூறியுள்ளனர். மேலும் 11 சதவீத மக்கள் கருத்து கூற விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

    அதிமுகவிற்கு வாக்களித்தவர்களே அதிருப்தி

    அதிமுகவிற்கு வாக்களித்தவர்களே அதிருப்தி

    2016ம் ஆண்டு தேர்தலில் ஜெயலலிதா தலைமையின் கீழ் 135 தொகுதிகளில் வென்ற அதிமுகவிற்கு ஏன் இந்த நிலைமை என்று பார்த்தால், மக்கள் அரசின் மீது அதிருப்தியில் இருப்பதே காரணமாக சொல்லப்பட்டுள்ளது. 2016 சட்டசபை தேர்தலில் அதிமுகவிற்கு நம்பிக்கையுடன் வாக்களித்தவர்களில் 3ல் ஒரு வாக்காளர் தற்போதைய நிலையில் அந்த கட்சிக்கு வாக்களிக்க விரும்பவில்லை என்று அதிருப்தி தெரிவித்துள்ளனர். அதிருப்தியில் உள்ள வாக்காளர்களின் யாருக்கு போகிறது என்பது தான் சர்வே சொல்லும் அடுத்த அதிர்ச்சியான விஷயம்.

    ரஜினிக்கு திரும்பும் அதிமுக வாக்குகள்

    ரஜினிக்கு திரும்பும் அதிமுக வாக்குகள்

    அதிமுக மீது அதிருப்தியில் இருக்கும 60 சதவீத வாக்காளர்களின் வாக்குகளும் அரசியல் கட்சி தொடங்கப் போவதாக அறிவித்துள்ள ரஜினிகாந்த்தின் பக்கம் தான் போகிறது. எஞ்சிய 26 சதவீத வாக்குகள் மட்டுமே திமுக பக்கம் போவதாக கருத்துக்கணிப்பு புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

    ரஜினியால் சரியும் அதிமுக

    ரஜினியால் சரியும் அதிமுக

    ஆக ரஜினியின் அரசியல் என்ட்ரியால் அதிக பாதிப்பு ஏற்படப் போவது அதிமுகவிற்குத் தான் என்பதை இந்த கருத்துக்கணிப்பு சொல்கிறது. 234 தொகுதிகளை பொறுத்தவரையில் அதிமுக, திமுக, ரஜினி எத்தனை இடங்களை பிடிப்பார்கள் என்றும் கருத்துக்கணிப்பு நடந்துள்ளது.

    அதிமுக சரிவால் ரஜினிக்கு வெற்றி

    அதிமுக சரிவால் ரஜினிக்கு வெற்றி

    அதில் திமுக 2016 தேர்தலை ஒப்பிடும் போது கூடுதலாக 32 தொகுதிகளையும், ரஜினி 33 தொகுதிகளையும் கைப்பற்றுவார் என்றும் கருத்துக்கணிப்பு சொல்கிறது. அதிமுக 135ல் இருந்து சரிந்து 68 தொகுதியை மட்டுமே கைப்பற்றும் என்றும், அதிமுக நழுவ விடும் தொகுதிகள் தான் ரஜினிக்கு பலம் சேர்க்கும் என்றும் கருத்துக்கணிப்பு தெளிவாக சொல்கிறது.

    English summary
    India today opinion poll shows that Rajinikanth Political entry is a setback to ADMK and nearly 60 percent of dissatisfied voters will be a boost for Rajini winning in election.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X