குடும்பத்தினருக்கு பதவிகேட்டு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது யார்? திமுகவை விளாசிய எடப்பாடியார்!
தனது குடும்பத்தினருக்கு பதவி கேட்டு மத்திய அரசுக்க கடிதம் எழுதியது திமுகதான் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளார்
சேலம்: தனது குடும்பத்தினருக்கு பதவி கேட்டு மத்திய அரசுக்க கடிதம் எழுதியது திமுகதான் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளார்.
சேலம் மாவட்டம் கருப்பூரில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சாதியற்ற சமுதாயம் உருவாக்க பாடுபட்டவர் எம்ஜிஆர் என்றார். எம்ஜிஆர் அனைவரையும் சமமாக மதித்தவர் என்று புகழாரம் சூட்டினார்.

எம்ஜிஆர், ஜெ.வுக்கு மணி மண்டபம்
எம்ஜிஆர் தனது திரைப்படங்களில் முற்போக்கு சிந்தனைகளை புகுத்தியவர் என்று கூறிய அவர் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவுக்கு மணி மண்டபம் கட்டப்படும் என்றார். சேலம் ஜெயலலிதாவின் கோட்டை என்றும் இங்கு யாரும் நுழைய முடியாது என்றும் கூறினார்.

தனது பேச்சை கேட்கின்றனர்
மேலும் தான் கூறும் கதைகளை யார் விமர்சித்தாலும் கதை சொல்வதை நிறுத்த மாட்டேன் என்றும் அவர் கூறினார். தான் கூறும் கதைகளை விமர்சிப்பவர்கள் தனது பேச்சை முழுமையாக கேட்கின்றனர் என்பதை அறிவதாகவும் அவர் கூறினார்.

இணக்கமாக இருப்பது குற்றமா?
மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பது குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சிப்பது குறித்து விளக்கமளித்த எடப்பாடியார், மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பது குற்றமா? என கேள்வி எழுப்பினார். எம்ஜிஆர் காலத்தில் இருந்தே அதிமுக மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து வருவதாகவும் அவர் கூறினார்.

மத்திய அரசை விமர்சித்தவர்கள்
மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து மக்கள் நலதிட்டங்களுக்கு தேவையான நிதியை பெறுவதாகவும் அவர் கூறினார். மேலும் தனது குடும்பத்தினருக்கு பதவிக் கேட்டு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியவர்கள் யார்? பதவி கிடைக்கவில்லை என மத்திய அரசை விமர்சித்தவர்கள் யார் என்பதையும் மக்கள் அறிவார்கள் என்றும் எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.

தண்ணீர் பெற்று தராதது ஏன்?
மத்திய அரசுடன் கூட்டணியில் இருந்தபோது திமுக மக்கள் நலனுக்காக என்ன செய்தது என்றும் அவர் கேள்வி எழுப்பினார். மத்தியில் அங்கம் வகித்த போது காவிரியில் தண்ணீர் பெற்று தராதது ஏன் என்றும் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பினார்.

மைனாரிட்டி அரசாக இருந்த திமுக
திமுக ஆட்சியில் இருந்த கடுமையான மின்வெட்டை போக்கியவர் ஜெயலலிதா தான் என்றும் அவர் கூறினார். எம்எல்ஏக்களின் கணக்கு கூறும் திமுக, முந்தைய ஆட்சியில் மைனாரிட்டி அரசாக இருந்தது என்றும் எடப்பாடி பழனிச்சாமி சாடினார். தமிழக அரசை யாராலும் அசைக்க முடியாது என்ற அவர் சேலம் மாவட்டம் எப்போதும் அதிமுகவின் கோட்டையாகவே திகழ்கிறது என்றார்
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications