For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மகேந்திரகிரியில் இஸ்ரோ நடத்திய கிரையோஜெனிக் என்ஜின் இறுதிக்கட்ட சோதனை வெற்றி

மகேந்திரகிரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 சி -25 ராக்கெட் என்ஜினின் சோதனை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

நெல்லை: மகேந்திரகிரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 சி -25 ராக்கெட் என்ஜின் இன்று சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனை வெற்றிகரமாக நடந்த முடிந்ததாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி. மற்றும் ஜி.எஸ்.எல்.வி-யின் 60 சதவீதப் பணிகள் மகேந்திரகிரியில் உள்ள திரவ இயக்கத் திட்ட மையத்தில் நடத்தப்படுகிறது. இந்நிலையில் ஜிஎஸ்எல்வி மார்க்3 சி-25 ராக்கெட்டின் கிரையோஜெனிக் என்ஜினின் இறுக்கட்ட சோதனை இன்று நடத்தப்பட்டது.

ISRO successfully tested Cryogenic engine in Mahendiragiri Nellai

இந்த சோதனை 640 வினாடிகள் நடத்தப்பட்டது. இதில் ஜிஎஸ்எல்வி ராக்கெட்டின் கிரையோஜெனிக் என்ஜின் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்றதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

நேற்று ஒரே ராக்கெட்டில் 104 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி இஸ்ரோ விண்வெளி ஆய்வுக்கழகம் உலக சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது

English summary
ISRO successfully tested Cryogenic engine in Mahendiragiri Nellai. Around 640 seconds the test was conducted.ISRO Said it Was success.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X