தாக்கல் செய்த கணக்குகளில் சந்தேகம்.. 30,000 பேருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வருமான வரி தாக்கல் செய்த 30 ஆயிரம் பேருக்கு வருமானவரித் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் 8ம் தேதி பண மதிப்பு நீக்க நடவடிக்கை பிரதமர் மோடி அறிவித்தார். இதன் மூலம் கறுப்பு பணம் ஒழிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. எனவே, பல குளறுபடிகள் அன்றாட மக்களின் வாழ்க்கையில் ஏற்பட்டது.

IT issues 30,000 tax notices

அதே போன்று வங்கி கணக்கு வழக்குகளிலும் பல கெடுபிடிகள் கையாளப்பட்டன. இந்நிலையில் பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பின் தாக்கல் செய்யப்பட்ட வருமானவரி கணக்குகளில் சந்தேகம் இருப்பதாக வருமானவரித் துறை கருதியது.

இதனையடுத்து, தாக்கல் செய்யப்பட்ட வருமானவரி கணக்குகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில் 30 ஆயிரம் கணக்குகள் சந்தேகத்திற்கு இடமாக உள்ளது என்று கண்டறியப்பட்டது. அந்த 30 ஆயிரம் பேருக்கும் வருமானவரித்துறை தற்போது நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
IT department has issued notice to 30,000.
Please Wait while comments are loading...