ஆபரேஷன் கல்யாணம்... சினிமா பாணியில் ஆவணங்களைத் தேடிய அடேங்கப்பா அதிகாரிகள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  சசிகலாவின் உறவினர்கள், ஆதரவாளர்கள் வீட்டில் வருமான வரி ரெய்டு-வீடியோ

  சென்னை: சசிகலாவின் உறவினர்களின் வீடுகளில் சோதனை நடத்தி வரும் அதிகாரிகள் விவேக் வீட்டு மொட்டை மாடியில் இருக்கும் தண்ணீர் தொட்டி, புகழேந்தி கார் என்று ஒரு இடம் விடாமல் ஆவணங்களைத் தேடி வருகின்றனர்.

  அதிமுக அம்மா அணி பொதுச்செயலாளர் சசிகலலாவின் ஒட்டுமொத்த சாம்ராஜ்யத்திலும் வருமான வரித்துறையினர் சல்லடை போட்டு ஆவணங்களைத் தேடி வருகின்றனர். தமிழகம் முழுவதும் சுமார் 190 இடங்களில் கல்யாண வீட்டுக்கு செல்வது போல கார்களை புக் செய்து வாடகைக் கார்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சுமார் 2000 பேர் சோதனைக் களத்தில் குதித்துள்ளனர்.

  விஷால், விவேக் வருமான வரி சோதனை அதிகாரிகளாக நடித்த செல்லமே படத்தில் வருமான வரி சோதனைக்கு கல்யாணம் என்று கோட் வார்த்தை பயன்படுத்துவார்கள். அந்த கோட் வார்த்தை தான் இங்கும் பின்பற்றப்பட்டிருக்கிறதோ என்று நினைக்கத் தோன்றுகிறது வருமான வரித்துறை அதிகாரிகள் கல்யாண வீட்டிற்கு கார் புக் செய்து சோதனைக்கு வந்துள்ளதைப் பார்க்கும்போது.

   8 அதிகாரிகள் சோதனை

  8 அதிகாரிகள் சோதனை

  ஜெயா டிவியின் அலுவலகத்திற்கு வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் அதன் சிஇஓவும் சசிகலாவின் அண்ணன் மகனுமான விவேக்கின் சென்னை மகாலிங்கபுரத்தில் உள்ள வீட்டிற்கும் சென்றனர். பெண் அதிகாரி தலைமையில் 8 அதிகாரிகள் காலையில் வந்து சோதனையில் ஈடுபட்டனர், இதனைத் தொடர்ந்து அங்கு போலீசாரும் வந்து சேர்ந்தனர்.

   ஆவணங்களைத் தேடிய அதிகாரிகள்

  ஆவணங்களைத் தேடிய அதிகாரிகள்

  ஆவணங்களை சரிபார்த்த அதிகாரிகள் வீட்டின் மொட்டை மாடிக்கு சென்று தண்ணீர் தொட்டி வரை துளாவியுள்ளனர். ஒரு வேளை தண்ணீர் தொட்டிக்குள் ஆவணங்கள் மறைக்கப்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகளுக்கு திடீர் சந்தேகம் வந்தது ஏன் என்பது தான் தெரியவில்லை.

   சீட்டுக்கு அடியில் இருக்குமோ?

  சீட்டுக்கு அடியில் இருக்குமோ?

  இதே போன்று பெங்களூருவில் அதிமுக அம்மா அணியின் வழக்கறிஞர் பிரிவை சேர்ந்தவரும் தினகரனின் தீவிர ஆதரவாளருமான புகழேந்தி வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அவருடைய வீட்டில் சலித்து சலித்து ஆவணங்களைத் தேடிய அதிகாரிகள், கடைசியில் அவருடைய காரிலும் டார்ச் அடித்து சீட்டுக்கு அடியில் எல்லாம் ஆவணங்களைத் தேடியுள்ளனர்.

   ஆபரேஷன் 'கல்யாணம்'

  ஆபரேஷன் 'கல்யாணம்'

  நடிகர் விஜயின் பைரவா படத்தில் தண்ணீர் தொட்டியில் பணத்தை பிளாஸ்டிக் கவரால் சுற்றி ஜெகபதி பாபு வைத்து அதை விஜய் கண்டுபிடிப்பதும், காரில் டோர் சைடுகளில் ஆவணங்கள் மறைத்து வைத்திருப்பது போலவும் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். வருமான வரி அதிகாரிகள் அதே சினிமா டெக்னிக்களை பயன்படுத்தி இன்றைய சோதனையில் களமிறங்கியுள்ளனர்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Is IT officials got techniques from Tamil Cinema films Chellame and Bairavaa for conducting raids all over Sasikala close aids in Tamilnadu with the name of Operation Kalyanam.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற

  X